BSNL நெட்வொர்க்கின் பிராட்பேண்டின் சில திட்டங்களின் கட்டணம் 30 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பல்வேறு விதமான பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் குறிப்பிட்ட சில மாதாந்திர பிளான்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது அனைத்து பிஎஸ்என்எல் வட்டங்களிலும் அமலுக்கு வருவதாக செய்திகள் வந்துள்ளன.
அதன்படி, 2ஜிபி CUL மாதாந்திர பிராட்பேண்ட் பிளான் 349 ரூபாயிலிருந்து 369 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 8Mbps வேகத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 2ஜிபி டேட்டா முடிந்ததும் இணையத்தின் வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும். பிஎஸ்என்எல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடேட் காலிங் சேவையும், பிற நெட்வொர்க்குகளுக்கு ரூ.600க்கான டாக்டைமும் வழங்கப்படுகின்றன. மேலும், இரவு 10.30 மணி முதல் காலை 6.00 மணி வரையில் இலவச நைட் காலிங் சேவைகளும் உள்ளன.
இதே 2ஜிபி CUL திட்டத்தின் அடுத்த நிலையாக அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் காலிங் வசதி கொண்ட பிளானின் விலை 399 ரூபாய் ஆகும். இந்தக் கட்டணம் தற்போது 419 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக 3ஜிபி CUL திட்டத்தின் விலை 499 ரூபாயிலிருந்து 519 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவும் 2ஜிபி CUL இன் அத்தனை அம்சங்களும் அடங்குகிறது. ஆனால், 2ஜிபி டேட்டாவுக்குப் பதிலாக 3ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.
அதிகப்பட்சமாக 4ஜிபி CUL, 5ஜிபி CUL, சூப்பர் ஸ்டார் திட்டங்களின் மாதாந்திரக் கட்டணம் 30 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. 4ஜிபி CUL பிளானின் கட்டணம் ரூ.599 இலிருந்து ரூ.629 ஆகவும், 5ஜிபி CUL பிளானின் மாதாந்திர கட்டணம் ரூ.699 இலிருந்து ரூ.729 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
சூப்பர் ஸ்டார் 300 பிளானின் கட்டணம் 749 ரூபாயிலிருந்து 779 ரூபாயாகவும், 15ஜிபி CUL திட்டத்தின் விலை 999 ரூபாயிலிருந்து 1,029 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றில் சூப்பர் ஸ்டார் 300 பிளானில் வாடிக்கையாளர்களுக்கு 10 Mbps வேகத்தில் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா காலியானதும் இணையத்தின் வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது.
Is Mi Notebook 14 series the best affordable laptop range for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்