'ஆண்ட்ராய்டிடம் தோற்றதுதான் என்னுடைய மிகப்பெரிய தவறு' - மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 25 ஜூன் 2019 11:46 IST
ஹைலைட்ஸ்
  • 'வில்லேஜ் குலோபல்' நடத்திய நிகழ்வு ஒன்றில், பில் கேட்ஸ் வருத்தம்
  • ஆண்ட்ராய்ட் வளர்ச்சி பற்றி பில் கேட்ஸ் பேச்சு
  • 2005-ல் ஆண்ட்ராய்ட் தளத்தை கூகுள் நிறுவனம் பெற்றது

"உண்மையில் வெற்றியாளர்கள் கைகளிலேயே அனைத்தும்", பில் கேட்ஸ்.

Photo Credit: YouTube/ Village Global

மைக்ரோசாப்டின் துணை நிருவனரான பில் கேட்ஸ், இந்த மிகப்பெரிய ஆண்ட்ராய்ட் தளத்தை தவறவிட்டது தான் அவர் செய்த 'மிகப்பெரிய தவறு' என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.  63 வயதான இந்த மைக்ரோசாப்ட் பாஸ், "மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்றளவிலும் ஒரு வலுவான நிறுவனமாக உள்ளது. இருப்பினும், ஆண்ட்ராய்ட் தளத்தை தன் கைகளில் வைத்திருந்தால், 'ஒரு தலைசிறந்த நிறுவனம்' என்ற பெயரிற்கு பதில் 'ஒரே ஒரு தலைசிறந்த நிறுவனம்' என்ற பெயரை பெற்றிருக்கும்" எனக் கூறியுள்ளார். 'வில்லேஜ் குலோபல்' (Village Global) நடத்திய நிகழ்வு ஒன்றில், பில் கேட்ஸ் இம்மாதிரி தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

"இந்த மென்பொருள் உலகத்தில், குறிப்பாக தளங்களில், வெற்றியாளர்கள் கைகளிலேயே அனைத்து சந்தையும் இருக்கும்." என்று அந்த நேர்காணலில் அவர் கூறியுள்ளார். 

"எனவே, நிர்வாகத்தில் மிகப்பெரிய தவறு என்னவென்றால் நான் மைக்ரோசாப்டிலேயே என் நேரத்தை செலவளித்ததும், ஆண்ட்ராய்ட் என்ற ஒன்றை மறந்ததும்தான்."

"அதாவது, ஆண்ட்ராய்ட் என்பது ஒரு நிலையான தளம், ஆப்பிள் அல்லாத தளம், இது மைக்ரோசாப்டின் வெற்றிக்கு இயற்கான ஒன்றாக அமைந்திருக்கும். உண்மையில், வெற்றியாளர்கள் கைகளிலேயே அனைத்தும்." என்று அவர் கூறினார்.

நீண்ட நேரம் நடந்த இந்த உரையாடலில், கேட்ஸ்,"விண்டோஸ் மற்றும் ஆப்பீஸின் வெற்றி என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தை குறுகிய நேரத்தில் வேறு நிலைக்கு எடுத்து சென்றது. ஆனால், ஆண்ட்ராய்ட் போன்ற ஒரு தளத்தை உருவாக்காதது, ஆப்பிள் தளத்திற்கு போட்டியாக ஒரு தளத்தை அறிமுகப்படுத்தாது, இதன் விளைவு இன்னும் மைக்ரோசாப்ட் 'ஒரு தலைசிறந்த நிறுவனம்' தான், 'ஒரே ஒரு தலைசிறந்த நிறுவனம்' இல்லை" என்று அவர் கூறியிருந்தார்.

"ஒருவேளை நாங்கள் அதை சரியாக பெற்றிருந்தால், நாங்கள் அந்த ஒரே நிறுவனமாக இருந்திருப்போம்" என்று அவர் கூறினார்.

அவர் பேசிய முழு காணோளி இதோ!

ஆண்ட்ராய்ட், பாலோ ஆல்டோ (Palo Alto)-வால் உருவாக்கப்பட்ட இந்த ஆண்ட்ராய்ட், இதை ஜுலை 2005-ல் கூகுள் நிறுவனத்திற்கு அவர் வெறும் 50 மில்லியன் டாலர்கள் (347 கோடி ரூபாய்) என்ற என்ற விலைக்கு விற்றார். பில்கேட்ஸ் கூறுவது என்னவென்றால்,"இந்த ஆப்பிள் அல்லாத தளத்திற்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு, இதன் மதிப்பு என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஒருவேளை கூகுள் நிறுவனத்திடமிருந்து இந்த ஆண்ட்ராய்டை பெறவெண்டுமென்றால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 400 பில்லியன் டாலர்கள் (27,76,500 கோடி ரூபாய்) தேவைப்படும்" எனக் கூறியுள்ளார். 

கூகுள் ஆண்ட்ராய்ட் வளர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் போன்களை தயாரித்துக்கொண்டிருந்தது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Windows Phone, Windows Mobile, Bill Gates, Android, Microsoft, Windows 10 Mobile
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus N6 விமர்சனம்: பல ஆண்டுகளில் ஒன்பிளஸின் மிகவும் கவனமாக உருவாக்கப்பட்ட போன்
  2. Oppo Reno 16: சீன மாடலைப் போலன்றி, இந்தியாவில் ஸ்னாப்டிராகன் சிப்சேட்டுடன் அறிமுகம் உறுதி
  3. iQOO Pad 5c அறிமுகம்: 10,000mAh பேட்டரி, 12.1-இன்ச் 2.8K டிஸ்ப்ளே - விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  4. Uber இந்தியாவில் 'Record My Ride', 'Ambulance Assistance' எனப் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்
  5. ஜிமெயில் மற்றும் கூகுள் கீப் -இல் புதிய உரையாடல் குரல் அம்சங்களை கூகுள் சோதிக்கத் தொடங்குகிறது
  6. ஒப்போ என்கோ ஏர் 5 ப்ரோ (Oppo Enco Air 5 Pro) விமர்சனம்: சமரசமற்ற தரம், முழுமையான மதிப்பு
  7. ஒன்பிளஸ் என்6 இந்தியாவில் அறிமுகம்: 8,000mAh பேட்டரி, டைமென்சிட்டி 6360 சிப்செட் மற்றும் விலையில் வெளியீடு!
  8. சாம்சங் கேலக்ஸி A27 5G இந்தியாவில் வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள் மற்றும் அதிரடி சலுகை விவரங்கள்
  9. வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம்: இது என்ன, எப்படிச் செயல்படுகிறது, ஏன் முக்கியம்?
  10. அமேசான் பிரைம் டே விற்பனை: ஒன்பிளஸ் 15, பேட் 4, நோர்ட் பட்ஸ் 4 உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.