கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வெள்ளியன்று கூறுகையில், ஐபோன் எக்ஸ் திரையை தொட்டதும் செயல்படுவதில்லை. சில சமயங்களில் இடைவெளி விட்டு செயல்படுவதாக தெரிவித்தார். ஐபோன் எக்ஸ் கடந்த நவம்பர் மாதம் விற்பனைக்கு வந்தது. ஐபோன் எக்ஸ்.எஸ் (ரூ.99,900) மற்றும் ஐபோன் எக்ஸ். ஆர் (ரூ.76,799) செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வந்ததும் ஐபோன் எக்ஸின் விற்பனை செய்யப்படவில்லை.
ஆப்பிள் நிறுவனம் கூறுகையில், ஒருசில 13இன்ச் மேக்புக் ப்ரோவில், சேகரிக்கப்பட்ட தகவல் இழப்பு மற்றும் டிரைவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
128 ஜிகா பைட் அல்லது 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் நோ டச் பார் லேப்டாப்கள் கடந்த ஜூன் 2017 லிருந்து ஜூன் 2018 வரை விற்பனை செய்யப்பட்டது. அப்போது வாடிக்கையாளர் வாங்கிய லேப்டாப்கள் விரைவில் சர்வீஸ் செய்து கொடுக்கப்படுமென்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேக்புக் ப்ரோ இலவசமாக சரிபார்க்கப்படும் போது ஐபோன் எக்ஸில் பழுதடைந்த போன்களுக்கு இலவச ஸ்கீரின் மாற்று செய்து கொடுப்படுமென்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. முதலில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ் ஸ்கிரீனில் ஏற்பட்டுள்ள பழுதிற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதற்கு முந்தைய ஐபோன் மாடல்களில் ஸ்கீரின் பழுது குறித்து பிரச்சனைகள் வந்தபோது இதே இலவச ஸ்கீரின் மாற்றினை மட்டும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்