Amazon Prime Day Sale: ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 4 ஆகஸ்ட் 2020 14:14 IST
ஹைலைட்ஸ்
  • ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.4,000 தள்ளுபடி
  • HDFC ஸ்மார்ட்போன்களுக்கு 10% கூடுதல் ஆஃபர்
  • ஹானர் 9A ஸ்மார்ட்போன்கள் பிளாஷ் சேல் செய்யப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்ஸ்களைத் தவிர்த்து மற்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் ஆஃபர்கள் உள்ளன.

ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமேசான் பிரைம் டே சேல் தொடங்குகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்ஸ்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்காக பிரைம் டே சேல் மூலம் சிறப்பு தள்ளுபடி விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு அமேசான் பிரைம் டே சேல் வரும் 6 ஆம் தேதி தொடங்குகிறது. 

இதில் மொபைல்ஸ் மற்றும் கேட்ஜெட்ஸ்களுக்கு 40 சதவீதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் வரையில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. குறிப்பாக சாம்சங் ப்ரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையில் ஆஃபரும், ஆப்பிள் ஐபோன் 11,  ஸ்மார்ட்போன்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 

ஃபிளாஷ் சேல்:
பிரைம் டே சேல் தினத்தன்று ரெட்மி 9, ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி நோட் 9, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஃபிளாஷ் சேல் முறையில் விற்பனைக்கு வருகின்றன. ரெட்மி பிரியர்கள் இந்த ஸ்மார்ட்போனை காலை 10 மணி, நண்பகல் 12 மணி, மதியம் 2 மணி, மாலை 4 மணி அளவில் ஆர்டர் செய்யலாம். ஹானர் 9A ஸ்மார்ட்போன் காலை 11 மணிக்கு பிளாஷ் சேல் செய்யப்படுகிறது. இதே போல் இதே ஸ்மார்ட்போன்களுக்கு  மறுநாள், அதாவது ஆகஸ்ட் 7 ஆம் தேதியும் பிளாஷ் சேல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Amazon Prime Day: ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி

சிறப்பு தள்ளுபடியைப் பொறுத்தவரையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஷாவ்மி ஸ்மார்ட்போன்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. இதே போல், சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையிலும், கூடுதலாக 4 ஆயிரம் ரூபாய் வரையிலும் சிறப்பு தள்ளுபடி உள்ளன. 


ஆப்பிள் ஐபோன் 11, ஐபோன் 8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு 14 ஆயிரம் ரூபாய் வரையிலும் சிறப்பு தள்ளுபடி உள்ளன. 9 மாதங்களுக்கு வட்டியில்லா இஎம்ஐ வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இது தவிர பவர் பேங்க், இயர்போன்கள், மொபைல் கேட்ஜெட்களுக்கு 70 சதவீதம் வரையில் தள்ளுபடி உள்ளன. குறிப்பாக கேட்ஜெட்கள் 99 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.


மற்ற சலுகைகள்:

ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்ஸ்களைத் தவிர்த்து மற்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் ஆஃபர்கள் உள்ளன. கேமராக்கள், ஹெட்போன்களுக்கு 70 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகின்றன.  லேப்டாப்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையில் ஆஃபர் உள்ளது. ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 60 சதவீதம் வரையிலும், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 40 சதவீதம் வரையிலும் சலுகைகள் உள்ளன.


Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.