அமேசான் இந்தியாவின் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனை (Amazon India's Fab Phones Fest sale) இன்று பல பிரபலமான மொபைல் போன்களில் ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனை தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் தொகுக்கப்பட்ட சலுகைகளுடன் 40 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது. இந்த விற்பனை நவம்பர் 29 வரை நடைபெறும். அமேசான், ஆக்சிஸ் வங்கியுடன் ஒப்பந்தம் செய்து, வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு ரூ, 1,500 உடனடி தள்ளுபடியை வழங்குகிறது. ஆக்சிஸ் வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் EMI பரிவர்த்தனைகளில் மட்டுமே தள்ளுபடி செல்லுபடியாகும்.
Amazon Fab Phones Fest 2019 sale – சிறந்த சலுகைகள்:
iPhone XR
ஆப்பிளின் iPhone XR 64GB-யின் விலை ரூ. 42,900 (MRP ரூ. 49,900)-யாக இந்த வாரம் நடைபெறும் Fab Phones Fest sale-ல் குறைக்கப்பட்டுள்ளது. இந்த போன் பொதுவாக ரூ. 44,999 விலைக் குறியுடன் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும். உங்கள் பழைய போன்களை எக்ஸ்சேஜ் செய்வதன் மூலம் கூடுதல் தள்ளுபடியாக ரூ. 7,050-ஐ பெறலாம். முக்கிய கிரெடிட் கார்டுகள் மற்றும் ஆக்சிஸ் வங்கி கார்டு பயனர்கள் EMI பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் ரூ. 1,500 வரை உடனடி தள்ளுபடியுடன் No-cost EMI ஆப்ஷனும் கிடைக்கிறது.
விலை: ரூ. 42,900 (MRP ரூ. 49,900)
OnePlus 7T
OnePlus 7T (8GB, 128GB) அமேசான் இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரூ. 34,999 (MRP ரூ. 37,999)-க்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடி அமேசானில் ஒன்பிளஸின் ஐந்தாம் ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். OnePlus 7T-யுடன் உங்கள் பழைய போன்களை எக்ஸ்சேஜ் செய்வதன் மூலம் உடனடி கூடுதல் தள்ளுபடியாக ரூ. 7,050-ஐ பெறலாம். HDFC வங்கி கடன் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்களும் கூடுதலாக ரூ. 1,500 உடனடி தள்ளுபடிக்கு தகுதி பெறுவார்கள்.
விலை: ரூ. 34,999 (MRP ரூ. 37,999)
OnePlus 7 Pro
அமேசான் இந்தியா OnePlus 7 Pro (8GB, 256GB)-யை தள்ளுபடி விலையுடன் ரூ. 42,999 (MRP Rs. 52,999)-க்கு தற்போது விற்பனை செய்கிறது. வேறு என்ன? HDFC வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு OnePlus 7 Pro-வை மற்றொரு உடனடி தள்ளுபடியான ரூ. 2,000-யை பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுடன் No-cost EMI கட்டண விருப்பங்களும் கிடைக்கின்றன.
விலை: ரூ. 42,999 (MRP ரூ. 52,999)
Honor 20
Honor 20 (6GB, 128GB) ரூ. 22,999 (MRP Rs. 35,999)-க்கு இந்த வாரம் நடைபெறும் அமேசானின் Fab Phones Fest sale-ல் விற்கப்படுகிறது. இந்த போன் முன்பு ரூ. 32,999-க்கு கிடைத்தது. தற்போது விலைக் குறைப்புடன் ரூ. 24,999-க்கு கிடைக்கிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனை இடமாற்றம் செய்து ரூ. 7,050 கூடுதல் உடனடி தள்ளுபடியைப் பெறுங்கள். Axis Bank கார்டுதாரர்கள் EMI பரிவர்த்தனைகளில் ரூ. 1,5000 கூடுதல் உடனடி தள்ளுபடிக்கு தகுதி பெறுவார்கள்.
விலை: ரூ. 22,999 (MRP ரூ. 35,999)
Vivo V17 Pro
Vivo V17 Pro தள்ளுபடி விலையில் ரூ. 27,990 (MRP ரூ. 32,990)-க்கு இந்த வாரம் நடைபெறும் அமேசான் இந்தியாவின் Fab Phones Fest sale-ல் விற்கப்படுகிறது. ஒப்பந்தத்தை இனிமையாக்க உதவக்கூடிய வகையில் ரூ. 8.050 வரை தொகுக்கப்பட்ட எக்ஸ்சேஞ் சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய கிரெடிட் கார்டுகளுடன் No-cost EMI ஆப்ஷனும் கிடைக்கின்றன. Vivo V17 Pro, குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், Qualcomm's Snapdragon 675 SoC-யால் இயக்கப்படுகிறது.
விலை: ரூ. 27,990 (MRP ரூ. 32,990)
Samsung Galaxy M30
Galaxy M30-யின் 4GB RAM, 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 12,499 (MRP ரூ. 16,490)-க்கு அமேசானின் Fab Phones Fest sale-ல் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 16-megapixel front-facing கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. Galaxy M30-யானது 4GB RAM ஆதரவுடன் Samsung's Exynos 7904 SoC-யால் இயக்கப்படுகிறது. பட்டியலிடப்பட்ட விலையிலிருந்து ரூ. 7,050-யை (அதிகபட்சம்) தொகுக்கப்பட்ட எக்ஸ்சேஞ் சலுகையை வழங்குகிறது.
விலை: ரூ. 12,499 (MRP ரூ. 16,490)
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்