மின்னல் வேக சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் உடன் வந்திருக்கும் Realme Neo 7

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 13 டிசம்பர் 2024 12:21 IST
ஹைலைட்ஸ்
  • Realme Neo 7 இரட்டை ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது
  • 16 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது
  • Android 15 அடிப்படையாகக் கொண்ட Realme UI 6.0 மூலம் இயங்குகிறது

Realme Neo 7 மூன்று வண்ண விருப்பங்களில் வெளியிடப்பட்டது

Photo Credit: Realme

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Realme Neo 7 செல்போன் பற்றி தான்.


Realme Neo 7 அதன் நியோ தொடரில் நிறுவனத்தின் சமீபத்திய மாடலாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நிறுவனம் விரைவில் 8000mAh பேட்டரியுடன் புதிய போனை அறிமுகம் செய்யுமென்று தகவல் வெளியாகியுள்ளது. இது MediaTek Dimensity 9300+ சிப்செட்டில் இயங்குகிறது. 50 மெகாபிக்சல் பிரதான சென்சார் கேமரா கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பை பெற்றுள்ளது. Realme Neo 7 ஆனது Realme GT Neo 6 செல்போனின் அடுத்த மாடலாக அறிமுகமாகிறது. ஆனால் அதில் GT பிராண்டிங் இல்லை. இது 80W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மூன்று வண்ண வழிகளில் கிடைக்கிறது. Realme Neo 7 ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.

Realme Neo 7 விலை

Realme Neo 7 ஆனது 12GB + 256GB ரேம் மற்றும் மெமரி மாடல் விலை ரூ. 24,000 என்பதில் ஆரம்பம் ஆகிறது. மேலும் 12GB + 512GB, 16GB + 512GB, மற்றும் 16GB + 1TB மாடல்களிலும் வருகிறது. இது Meteorite Black, Starship மற்றும் Submersible வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Realme Neo 7 அம்சங்கள்

Realme Neo 7 ஆனது டூயல் நானோ சிம் ஆப்ஷன் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6.0 மூலம் இயங்குகிறது. 6.78-இன்ச் 1.5K 8T LTPO டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 6,000நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2,600Hz டச் மற்றும் 900Hz 900 ஹெர்ட்ஸ் டச் திறனை கொண்டுள்ளது. 1Hz முதல் 120Hz வரையிலான புதுப்பிப்பு வீதத்தை டிஸ்ப்ளே தருகிறது. இது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ சிப்செட்டில் 16ஜிபி ரேம் மற்றும் அதிகபட்சம் 1டிபி சேமிப்பகத்துடன் இயங்குகிறது. கைபேசி 12ஜிபி வரைரேமை சப்போர்ட் செய்கிறது.


Realme Neo 7 ஆனது இரட்டை பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது. இதில் OIS சப்போர்ட் உடன் 50 மெகாபிக்சல் Sony IMX882 கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை வைட்-ஆங்கிள் கேமரா உள்ளது. செல்ஃபிக்களுக்கு, 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளது. மேம்பட்ட நெட்வொர்க் இணைப்புக்கான ஸ்கை கம்யூனிகேஷன் சிஸ்டம் 2.0 அம்சத்தை இந்த கைபேசி கொண்டுள்ளது. 7,700மிமீ சதுர VC வெப்பச் சிதறல் பகுதி பின்புறம் இருக்கிறது. கேம் விளையாடும் போது செல்போன் சூடாவதை இது தடுக்கிறது. இணைப்பு விருப்பங்களில் 5G, Beidou, Bluetooth 5.4, GPS, Galileo, GLONASS, QZSS, NavIC, NFC, Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax/be ஆகியவை அடங்கும். அகச்சிவப்பு ரிமோட் கண்ட்ரோல் மற்றும் திரையின் கீழ் கைரேகை சென்சார் ஆகியவை உள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme Neo 7, Realme Neo 7 Price, Realme Neo 7 Specifications

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
  2. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  3. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  4. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  5. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  6. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
  7. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
  8. Meta Platforms மோசடி தடுப்பு கருவிகளை விரிவுபடுத்துகிறது – WhatsApp-ல் புதிய Device Link எச்சரிக்கை
  9. Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகம் – 200 மெகாபிக்சல் Leica கேமரா, தொடர்ச்சியான Optical Zoom: விலை மற்றும் அம்சங்கள்
  10. Vivo Y51 Pro 5G இந்தியாவில் அறிமுகம் – 7,200mAh பேட்டரி, 50 மெகாபிக்சல் கேமரா: விலை மற்றும் விவரங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.