Vivo இந்த போனில் அதிரடியாக 1000 ரூபாய் டிஸ்கவுன்ட்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 13 ஆகஸ்ட் 2024 11:39 IST
ஹைலைட்ஸ்
  • Vivo Y58 5G ஆனது Snapdragon 4 Gen 2 SoC உடன் வருகிறது
  • IP64 மதிப்பீடு செய்யப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது
  • 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது

Photo Credit: Vivo

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Vivo Y58 5G செல்போன் பற்றி தான்.  

விவோ நிறுவனம் தனது vivo Y58 5G ஸ்மார்ட்போனை இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதிய போனுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது விவோ நிறுவனம். இந்த செல்போன் Snapdragon 4 Gen 2 SoC சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 50-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட் மற்றும் தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்புக்கான IP64-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு அறிமுகமான நிலையில் தற்போது விவோ விலை குறைப்பை அறிவித்துள்ளது. 

முன்பு vivo Y58 5G ஸ்மார்ட்போன் ரூ.19,499 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனுக்கு ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.18,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக Amazon, vivo India e-store, Flipkart உள்ளிட்ட தளங்களில் வாங்க முடியும். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் மட்டுமே இப்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.  

Vivo Y58 5G செல்போனில் 6.72-இன்ச் முழு-HD+ டிஸ்பிளே உள்ளது. 2.5D LCD திரை 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் TUV Rheinland Low Blue Light Eye Care சான்றிதழைக் கொண்டுள்ளது. இது 8GB LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 2.2  மெமரியுடன் கூடிய 4nm Snapdragon 4 Gen 2 SoC மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் மெமரியை 1TB வரை விரிவாக்கலாம். ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 14 உடன் வந்துள்ளது. Vivo Y58 5G செல்போனில் இரட்டை பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் யூனிட்டுடன் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது. 

Adreno 613 GPU கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். இந்த மொபைலில் கொடுக்கப்பட்டிருக்கும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் GPS, BeiDou, GLONASS, Galileo மற்றும் QZSS ஆகியவை அடங்கும். Vivo Y58 5G மொபைலானது இன்-டிஸ்ப்ளே ஃபிங்ர்-பிரிண்ட் சென்சாரைக் கொண்டுள்ளது.  

 நான்கு வருடம பேட்டரிக்கு கியாரண்டி கொடுக்கப்படுகிறது. டூயல் சிம், 5ஜி , டூயல்-பேண்ட் வைஃபை , புளூடூத் 5.1, ஜிபிஎஸ் , USB Type-C உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டிசப்போர்ட் வசதி உள்ளது.   

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo Y58 5G, Vivo Y58 5G Price in India, Vivo Y58 5G Specifications, Vivo
குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.
...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus Open: OxygenOS 16 அப்டேட் வெளியீடு! AI மற்றும் Performance அப்கிரேடுகள்
  2. ரேஸ் பிரியர்களுக்கான போன்! Aston Martin-உடன் கைகோர்த்து Realme வெளியிட்ட Limited Edition போன்
  3. இனி நெட்வொர்க் இல்லனாலும் போனை யூஸ் பண்ணலாம்! Apple-ன் அடுத்த பாய்ச்சல்! புதிய Satellite அம்சங்கள்
  4. Samsung ரசிகர்களுக்கு ஒரு ஹாட் நியூஸ்! Galaxy S26 சீரிஸ் திட்டமிட்டபடி வருது! ஆனா விலையும் ஏறுது
  5. Oppo-வின் லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் போன்! Find X9 சீரிஸ்-ஓட கலர் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்ஸ் வெளியானது
  6. உங்க WhatsApp அக்கவுண்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு! Strict Account Settings மோட் பற்றி தெரிஞ்சுக்கோங்க
  7. Moto G67 Power 5G: 7000mAh Battery & Snapdragon 7s Gen 2 உடன் இந்தியாவில் அறிமுகம்!
  8. Motorola Edge 70: 5.99mm Slim Profile, Snapdragon 7 Gen 4 உடன் அறிமுகம்
  9. OnePlus Ace 6 Pro Max: 16GB RAM, 8000mAh Battery உடன் விரைவில் அறிமுகம்
  10. Lava Agni 4: 7000mAh Battery & Aluminium Frame உடன் நவம்பர் 20-ல் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.