2018-க்கான புதிய ஐ-போன் மாடல்: செப்டம்பரில் சந்தையில் களம் இறங்கும்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 5 ஜூன் 2018 15:46 IST
ஹைலைட்ஸ்
  • மூன்று புதிய ஐ-போன்களைக் களம் இறக்க ஆப்பிள் முடிவு
  • விரைவில் சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைப்பு
  • வரும் செப்டம்பரில் அறிமுகம் ஆக இருக்கிறது

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு (2018) மூன்று புதிய ஆப்பிள் ஐ-போன்களைக் களமிறக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மிங் சீ குவோ வெளியிட்டுள்ளார். அறிமுகம் ஆகவுள்ள ஐ-போன்கள் விரைவில் சார்ஜ் ஆகும் வகையிலும், பேட்டரி நீண்ட நேரம் தாங்கும் வகையிலும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் முன்னதாகவே இரண்டு மாடல்களின் வகைகளைப் பற்றிக் கூறியுள்ளது. அதாவது ஓஎல்இடி டிஸ்ப்ளே உடனான ஒரு மாடலும், மற்றொன்று எல்இடி வகை மாடலாகவும் விற்பனைக்கு வர உள்ளது. 6.1 இன்ச் அளவு உள்ள ஐ-போன் சுமார் 40,300 ரூபாயிலிருந்து 47,000 ரூபாய் வரையில் இருக்கலாம் என்றும் 5.8 இன்ச் ஐ- போன் 53,700 ரூபாயிலிருந்து 60,400 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் 6.5 இன்ச் அளவுள்ள ஓஎல்இடி டிஸ்ப்ளே உடனான மாடல் 60,400 ரூபாயிலிருந்து 67,100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படும் என உத்தேச விலைப்பட்டியல் ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு ஆப்பிள் ஐ- போன்களின் விலை குறைந்தே சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. உற்பத்தித் திறன் அதிகரித்து உள்ளதாலும் விலை குறைவாகவே இந்த ஆண்டின் அறிமுகம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான புதிய மாடல்கள் அனைத்தும் செப்டம்பர் மாதத்திலேயே அறிமுகம் ஆவது உறுதியாகி உள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: 2018 iPhone, Apple, Ming Chi Kuo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.