கம்ப்யூட்டரில் வைரஸ் பாதிப்பு போல புதிய பாதிப்பு நடப்பதாக, ஜெர்மனியின் கணினி மற்றும் தகவல் பாதுகாப்பு அமைப்பான ஃபெடரல் சைபர் ஏஜன்சி கண்டுபிடித்து எச்சரித்துள்ளது.
ஒரு நாட்டின் கணினி தரவுகளைத் திருடுவதன் மூலம் அந்த நாட்டை அடிமைப்படுத்த முடியும். அந்த அளவுக்கு கணினி தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அத்தகைய தரவுகளைத் திருடவோ அல்லது அழிக்கவோ கண்டுபிடிக்கப்பட்டதுதான் வைரஸ். ஏற்கனவே ரான்சம்வேர் என்ற வைரஸ், நிறுவனங்களின் கம்ப்யூட்டர் தரவுகளை நாசம் செய்து வரும் நிலையில் புதிய கணினி பாதிப்பை ஜெர்மானிய நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
ஃபெடரல் சைபர் எஜன்சி இதுகுறித்து கூறியதாவது, "இந்த பாதிப்பு ஜனவரி மாதத்தில் கண்டறியப்பட்டது. இது அடுத்த தலைமுறை கம்ப்யூட்டர் முறைகளான கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் விர்ச்சுவர் தொழில்நுட்பத்தை பாதிக்க வாய்ப்புகள் அதிகம். பிராசசரில் உண்டாகும் கோளாரினால் ஏற்படும், இந்த பாதிப்பு மெதுவாக கம்ப்யூட்டர் பாதுகாப்பு அமைப்புக்குள் ஊடுருவி பாஸ்வேர்டு உள்ளிட்ட தரவுகளைத் திருடி, அப்படியே கம்ப்யூட்டரை செயலிழக்கச் செய்யும். எனவே கணினி சிப் மற்றும் ஹார்டுவேர் தயாரிப்பாளர்கள் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும். ஜெர்மனியைச் சேர்ந்த கம்ப்யூட்டர் வார இதழ், ஏற்கனவே இதுபோன்ற புதிய தாக்குதல் 8 முறை நடந்ததாக கூறியது. மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் இதே கருத்தை வலியுறுத்தி, இந்த தாக்குதலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது" இவ்வாறு கூறிய பெடரல் சைபர் அமைப்பு இதை முற்றிலுமாக நீக்கமுடியாது. ஆனால் குறைக்க முடியும். என்று எச்சரித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்