ஷாவ்மியின் லேப்டாப் விரைவில் இந்தியாவுக்கு வருகிறது!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 30 ஏப்ரல் 2020 15:11 IST
ஹைலைட்ஸ்
  • ஷாவ்மி, இந்தியாவில் மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தவுள்ளது
  • நிறுவனத்தின் தலைவர் சில்லறை விற்பனையாளர்களிடம் பேசினார்
  • ஊரடங்கு முடிந்த பின்னரே வெளியீடு நடைபெறவுள்ளது

ரெட்மிபுக் மற்றும் எம்ஐ மடிக்கணினிகள் விரைவில் வெளியிடப்படும் என்று டிப்ஸ்டர் தெரிவித்துள்ளது

ஷாவ்மி இதுவரை, சீனாவில் மட்டுமே மடிக்கணினிகளை விற்பனை செய்துள்ளது. இந்த மடிக்கணினிகள் எம்ஐ மற்றும் ரெட்மி பிராண்டுகளின் கீழ் இந்தியாவுக்கு வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சீன நிறுவனம் இந்தியாவில் ரெட்மிபுக் வர்த்தக முத்திரைக்கு விண்ணப்பித்தது. 

பிப்ரவரியில் இந்தியாவில் ரெட்மி புக் 13 வெளியாவதாக வதந்திகள் வந்தன. ஆனால் அது வெளியிடப்படவில்லை. இந்தியாவில் ஷாவ்மி லேப்டாப் அறிமுகம் செய்திகள் மீண்டும் முன்னுக்கு வந்தன. இந்த விவகாரம் குறித்து நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

எம்ஐ மற்றும் ரெட்மி மடிக்கணினிகள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று சமீபத்தில் ட்விட்டரில் இஷான் அகர்வால் தெரிவித்தார். நிறுவனம் இந்த வாரம் சில்லறை விற்பனையாளர்களுடன் பேசி வருகிறது. வெளியீட்டின் சரியான நேரம் தெரியவில்லை.

நிறுவனத்தின் லேப்டாப் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Xiaomi தலைவர் Manu Kumar Jain கூறவில்லை. கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்ததும் ஷாவ்மியின் முதல் மடிக்கணினி இந்திய சந்தைக்கு வரக்கூடும்.


Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: RedmiBook, Xiaomi, Manu Kumar Jain, Mi Notebook
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  2. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
  3. ஜியோ ஹோம் 2 மாத திட்டத்தில் 1 மாதம் இலவசம்: 100Mbps இன்டர்நெட், 12 OTT ஆப்ஸ்கள் இலவசம்!
  4. அறிமுகத்திற்கு முன் கசிந்தது விவோ S2 விலை, முழு விவரங்கள் மற்றும் வடிவமைப்பு!
  5. கூகிள் இந்தியாவில் 'ஆஸ்க் கூகிள் பே' என்ற ஜெமினி AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது
  6. Paytm தனது செயலியில் பகிரப்பட்ட குழுச் செலவுகளுக்காக பில்களைப் பிரிக்கும் வசதியை அறிமுகப்படுத்துகிறது
  7. ஜெமினியால் இப்போது கூகிள் டாக்ஸில் உள்ள கருத்துகளைப் படிக்கவும்,சுருக்கவும்,பதில்களை வரைவு செய்யவும் முடியும்
  8. சாம்சங் கேலக்ஸி S26 FE போனின் சார்ஜிங் வேகத்தில் மாற்றம் இருக்காது என சான்றிதழ் தளம் மூலம் தெரியவந்துள்ளது!
  9. வாட்ஸ்அப் வெப்பில் குரூப் வீடியோ கால் வசதி அறிமுகம்; குவிக்HD, சத்தம் குறைப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன!
  10. விவோ T5x 5G ஃபியூஷன் ரெட் வண்ண மாடல் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.