சியோமியின் முதல் லேப்டாப்பான 'ரெட்மீபுக் 14' : என்னவெல்லாம் கொண்டுவருகிறது?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 18 மே 2019 11:46 IST
ஹைலைட்ஸ்
  • 'ரெட்மீபுக் 14' உலோகத்தினால் தயாரிக்கப்படிருக்கலாம்
  • இதன் எடை 1.3 கிலோவாக இருக்கும்
  • இன்டெல் கோர் i3, கோர் i5 மற்றும் கோர் i7 என ப்ராசஸர்களை கொண்டிருக்கலாம்.

ரெட்மீபுக் 14 'சில்வர்' என்ற ஒரே வண்ணத்தில் வெளியாகலாம்

முன்னதாகவே சியோமி நிறுவனம், சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய ஸ்மார்ட்போனுடன் லேப்டாப் ஒன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்த வாரத்தில், சீனாவில் வெளியாகவுள்ள தனது அடுத்த ஸ்மார்ட்போனின் பெயரை வெளியிட்டார், அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் லூ வெய்பிங்.

K20 என பெயரிடப்பட்டிருந்த இந்த ஸ்மார்ட்போன், அந்த நிறுவனத்தின் 'கில்லர்' தொடரில் அறிமுகமாகவுள்ள முதல் ஸ்மார்ட்போன். அப்போது இந்த லேப்டாப் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், தற்போது இந்த லேப்டாப் குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. 'ரெட்மீபுக் 14' என பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப், K20 ஸ்மார்ட்போனின் அறிமுகத்தின்பொழுது அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ரெட்மீ மற்ற பொருட்கள் எப்படி மலிவு விலையில் கிடைக்கப்பெருகிறதோ, இந்த லேப்டாப்பின் விலையும் அவ்வாறே அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தளங்களில் இதனை பற்றி தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. ப்ளூடூத் சிக் (Bluetooth SIG), தன் தளத்தில் இந்த 'ரெட்மீபுக் 14' லேப்டாப் பற்றிய தகவல்களை முதலில் வெளியிட்டது. இந்த தகவல்களை உறுதி செய்யும் வகையில் பிரபல தொழில்நுட்ப வல்லுனர் இஷான் அகர்வாலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். இவர், இந்த தகவல்களை மைஸ்மார்ட்ப்ரைஸ் (MySmartPrice) தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அகர்வால் கூறும் தகவல்களின்படி, இந்த லேப்டாப் 14-இன்ச் திரையை கொண்டிருக்கும். இன்டெல் கோர் i3, கோர் i5 மற்றும் கோர் i7 என மூன்று வகையான ப்ராசஸர்களை கொண்டிருக்கலாம். இதில் ஜீஃபோர்ஸ் MX250 கிராபிக்ஸ் கார்ட் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த லேப்டாப், 4GB RAM அல்லது 8GB RAM என இரண்டு வகைகளிலும், 256GB அல்லது 128GB ஃப்ளாஷ் மெமரியையும் கொண்டிருக்கும் என கூறியுள்ளார். மற்றும், ப்ளூடூத் சிக் இந்த 'ரெட்மீபுக் 14' லேப்டாப் ப்ளூடூத் v4.0 வசதி கொண்டிருக்கும் என கூறியுள்ளது.

இணையதளத்தில் வெளியாகி, பரவலாக பகிறப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த லேப்டாப்பின் சிறப்பம்சங்கள் அடங்கிய ஒரு புகைப்படத்தில், உலோகத்தினால் தயாரிக்கபடவுள்ள இந்த லேப்டாப் 1.3 கிலோ எடை கொண்டிருக்கும், 'சில்வர்' என்ற ஒரே வண்ணத்தில்தான் வெளியாகப்போகிறது. 4GB RAM அல்லது 8GB RAM மற்றும் 256GB அல்லது 128GB ஃப்ளாஷ் மெமரி கொண்ட இந்த லேப்டாப்பில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் பொன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும் இந்த லேப்டாப், விண்டோஸ் 10 அமைப்பை கொண்டிருக்கும் எனவும் குறிப்பிடிருந்தது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: RedmiBook 14, Redmi, Xiaomi

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரூ. 80,000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமிங் லேப்டாப்கள்: ஆசஸ் டஃப் A15, லெனோவா LOQ மற்றும் பல சிறந்த தேர்வுகள்
  2. மோட்டோ ஜி77 பவர் ஜூலை 8 வெளியீட்டிற்கு முன் இணையதளத்தில் முக்கிய விவரக்குறிப்புகளுடன் பட்டியலிடப்பட்டது
  3. நத்திங் போன் 4b இந்தியா அறிமுகம்: வெளியீட்டு தேதி, எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்
  4. அமேசான் பிரைம் டே 2026: ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் ஸ்ட்ரீமிங் சாதனங்களுக்கான சிறந்த சலுகைகள்
  5. அமேசான் பிரைம் டே 2026 லேப்டாப் டீல்கள்: HP, Asus, Lenovo, Dell, Acer மாடல்களுக்கு சிறந்த தள்ளுபடிகள்
  6. Vivo Y500 4G அறிமுகம்:8,100mAh பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் கேமராவுடன் வெளியீடு -விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  7. அமேசான் பிரைம் டே 2026: சாம்சங், சோனி, லுமியோ உள்ளிட்ட நிறுவனங்களின் 55-அங்குல ஸ்மார்ட் டிவி சலுகைகள்
  8. இந்தியாவில் ₹30,000-க்குள் சிறந்த கேமரா போன்கள்: Motorola Edge 70 Fusion, Galaxy F56 மற்றும் பல
  9. இந்தியாவில் ரூ. 30,000-க்கு கீழ் சிறந்த மொபைல்கள்: மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன், ரியல்மி P4 பவர் மற்றும் பல
  10. இன்டெல் கோர் 5 சீரிஸ் 3 சிபியுஉடன் இந்தியாவில் அறிமுகமான ஆசஸ் விவோபுக் 15 (2026): விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.