பிரபல லேப்டாப் நிறுவனமான டெல், தற்போது அதிக பேட்டரி பேக் அப் கொண்ட லேப்டாப்பை சந்தையில் களம் இறக்கியுள்ளது. இது 34 மணி நேரம் வரை தாங்கும் பேட்டரியை கொண்டுள்ளது. இந்த அட்டகாச லேப்டாப் குறித்த விவரங்களை பார்க்கலாம்...
டெல் latitude 9510 என பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப் 15 இன்ச் அளவை கொண்டதாகும். மற்ற லேப்டாப்புகளுடன் ஒப்பிடும்போது இது 34 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. 5 ஜி Connectivity, டெல் ஆப்டிமைசர் மென்பொருளும் இதில் உள்ளன.
இது AI - Artificial Intelligence அடிப்படையிலான கணினி ஆகும். Dell latitude மடிக்கணினி இரண்டு வகைகளில் கிடைக்கிறது.
இந்தியாவில் டெல் லேட்டிடியூட் 9510 விலை ரூ. 1,49,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வணிகத்தை மையமாகக் கொண்ட மடிக்கணினி. எனவே, இதுகுறித்த மேலதிக தகவல்களை டெல் நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம். அலுவலக பயன்பாடு அடிப்படையில் இந்த லேப்டாப் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல் Latitude 9510 லேப்டாப்பிற்கு இன்டெல்லின் Project Athena சான்றிதழ் அளித்துள்ளது. மடிக்கணினியை தூக்கத்திலிருந்து எழுப்பும் திறன், நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் பிரீமியம் உருவாக்கம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். மிக லேசான மற்றும் சக்திமிக்க லேப்டாப்பாக இது கருதப்படுகிறது. இதன் எடை 1.4 கிலோ.
இது 15.6 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, அலுமினிய வடிவமைப்பு மற்றும் 2 இன் 1 மாடலில் கொரில்லா கிளாஸ் டிஎக்ஸ் பாதுகாப்புடன் டச் பேனலைக் கொண்டுள்ளது. மடிக்கணினியை 10 வது ஜெனரல் இன்டெல் கோர் i7 vPro CPU மற்றும் விருப்பமான 5 ஜி மோடம் வரை கட்டமைக்க முடியும். இது 16 ஜிபி ரேம் நினைவகத்தை கொண்டிருப்பதால் அட்டகாசமான வேகத்தை நாம் பயன்படுத்தும்போது உணர முடியும்.
Connectivity பிரிவில் இரண்டு டைப்-சி தண்டர்போல்ட் 3 போர்ட்கள், ஒரு யூ.எஸ்.பி டைப்-ஏ (யூ.எஸ்.பி 3.2) போர்ட், மைக்ரோ எஸ்.டி கார்டு ரீடர், விருப்பமான ஸ்மார்ட் கார்டு ரீடர் மற்றும் ஒரு HeadPhone Jack ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்