இன்று பட்ஜெட் நாள் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2020-ஐ நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். பட்ஜெட் உரை காலை 11 மணிக்கு தொடங்கியது. மேலும் வளர்ச்சி மற்றும் செலவினங்களைத் தூண்டுவதற்கான புத்துயிர் நடவடிக்கைகளை சீதாராமன் அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்த பட்ஜெட்டை, டிவி, என்.டி.டி.வி செயலிகள், என்.டி.டி.வி சேனல்களிலும், என்.டி.டி.வி இந்தி மற்றும் ஆங்கில வலைத்தளங்களிலும் கூட நேரடியாக பார்க்க முடியும். மேலும், முழு பட்ஜெட் அமர்வும் என்டிடிவியின் யூடியூப் சேனல் மற்றும் பல இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
டிவி, இணையதளம் மற்றும் மொபைலில் 2020 பட்ஜெட்டை நீங்கள் எவ்வாறு பார்க்கலாம் என்பதைப் பற்றி மேலும் படிக்கவும்.
மார்ச் 2021 உடன் முடிவடையும் முழு ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சீதாராமன் முன்வைக்கிறார். மேலும், மொபைல் மற்றும் தொலைத் தொடர்புத் துறைக்கான சீர்திருத்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
குறிப்பிட்டுள்ளபடி, யூனியன் பட்ஜெட் 2020 காலை 11 மணிக்கு தொடங்கியது. மேலும், என்.டி.டி.வி இந்தி மற்றும் ஆங்கில சேனல்களில் டிவியில் பார்க்கலாம். டிவியில் பார்க்க முடியாவிட்டால், அதை இணையத்தில் உள்ள NDTV Hindi மற்றும் NDTV English வலைத்தளங்களில் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யலாம், அங்கு சீதாராமன் அறிவித்தவற்றின் நிபுணர் பகுப்பாய்வைக் காணலாம்.
மாற்றாக, எல்லா நிகழ்நேர புதுப்பிப்புகளையும் பெற, Android அல்லது iOS-ல் NDTV செயலியை பதிவிறக்கலாம். மேலும், செயலியில் லைவ் டிவியையும் பார்க்கலாம். இந்த பட்ஜெட், என்.டி.டி.வி இந்தியா யூடியூப் channel-லிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும், கீழே உள்ள உட்பொதிக்கப்பட்ட வீடியோவிலும், பட்ஜெட்டை பார்க்கலாம்.
அரசு நடத்தும் தூர்தர்ஷன் கூட பட்ஜெட்டை நேரடியாக ஸ்ட்ரீமிங் செய்யும். மேலும், நீங்கள் அதை டிவியில் அல்லது அவர்களின் YouTube channel வழியாக பார்க்கலாம். பட்ஜெட்டில் அனைத்து பெரிய அப்டேட்டுகளையும் பெற Twitter, Facebook மற்றும் Instagramல் என்டிடிவி கையாளுதல்களைப் பின்பற்றவும் பரிந்துரைக்கிறோம். கூடுதலாக, அனைத்து பெரிய செய்திகள் மற்றும் நேரடி அப்டேட்டுகளை என்டிடிவியின் பிரத்யேக பட்ஜெட் கவரேஜ் பக்கத்தில் (budget coverage page) பின்பற்றலாம்.
வளர்ந்து வரும் மொபைல் போன் மற்றும் கூறு உற்பத்தித் துறை, 2020 பட்ஜெட்டில் ஏற்றுமதி சலுகைகளையும், மொபைல் பாகங்களில் குறைந்த ஜிஎஸ்டியையும் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில், சில கூறுகள் மீதான இறக்குமதி வரிகள் இன்னும் அதிகமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். டெலிகாம் தொழில்கள் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் உரிமக் கட்டணக்கள் குறைக்க எதிர்பார்க்கின்றன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்