புகைப்படங்களில் பின்னணியை (back ground) நீக்குவது மிகவும் பொதுவான செயல் ஆகும். ஆனால் இந்த பின்னணியை நீக்கும் முறையால் அதிகபடியான நேரம் செலவாகும். ரிமூவ்.பீ.ஜி (Remove.bg) என்ற புதிய இலவச ஆன்லைன் கருவி மூலம் ஐந்து விநாடிகளில் புகைப்படங்களில் இருக்கும் பின்னணியை சுலபமாக அகற்ற முடிகிறது.
ஃபோட்டோஷாப் அல்லது வேறு சிக்கலான புகைப்பட எடிட்டிங் மென்பொருளை விட இந்த பதிய டூல் வேகமாக பின்னணியை நீக்கிவிடும். ஒரு புகைப்படத்தில் இருக்கும் ஒரு நபரை மையக்கருத்தாக வைத்து அதன் பின்னணியை மட்டும் இந்த டூல் நீக்குகிறது.
இக்கருவியை பயன்படுத்த நாம் செய்யவேண்டுயவை, கணினியிலிருந்து ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்து அதை ரிமூவ்.பீ.ஜி (Remove.bg) டூலில் பதிவேற்றவேண்டும். பின்னர் சில விநாடிக்குள் முடிவுகளை நாம் பெற முடியும். Remove.bg மூலம் பின்னணி நீக்கப்பட்ட புகைப்படத்தை (பி.என்.ஜி) PNG வடிவத்தில் விரைவாக பதிவிறக்கம் செய்ய மூடியும்.
இந்த இலவச ஆன்லைன் கருவி AI (செயற்கை தொழில்நுட்பம்) பயன்படுத்தி பின்னணியில் இருக்கும் புகைப்படத்திற்க்கு தேவையில்லாதவைகளை வேகமாக நீக்கிவிடலாம். இந்த கருவியில் இருக்கும் குறைபாடு என்றால், இந்த டூலினால் போர்ட்டிரேட் வடிவத்தில் இருக்கும் புகைப்படத்தின் பின்னணியை மட்டுமே அகற்ற முடியும். மேலும் தற்போதைய நிலையில் இந்த டூல் 500x500 பிக்சல்கள் அளவுள்ள படங்களை மட்டுமே பதிவிறக்க முடியும்.
மேலும் இக்கருவியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தியின் படி விரைவில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தரமான புகைப்படங்களை பதிவிறக்கம் செய்யும்படி மாற்றப்போகிறோம் என தகவல் வெளியானது.
இந்த தளத்தை முயற்சி செய்தபோது அது நன்றாக வேலை செய்கிறது. ஆனால் புகைப்படத்தின் பின்னணி தெளிவாக இல்லை என்றாலோ அல்லது மிருகத்தின் புகைப்படம் இருந்தாலோ இந்த டூல் தடுமாறுகிறது என்பது கூடுதல் தகவல்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்