இணைய தேடுதளமான ‘மொசிலா ஃபயர்ஃபாக்ஸ்’ செயல்திட்ட அதிகாரி மிட்சல் பேக்கர் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
"பாதுகாப்பு, நம்பகத்தன்மை, இணைய தொடர்பு ஆகியவற்றை முழுமையாக கிடைக்க வேண்டும் என்று நம்புகியேன். அதற்காக உழைக்கிறேன். நன்மை தரும் இணையத்தை சில சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்துகின்றனர். ஐரோப்பிய யூனியன் கொண்டு வந்துள்ள தரவு விதிமுறைகள் பல நாடுகளுக்குப் பயன்தரும். மொசிலா வாடிக்கையாளர்களின் தரவுகள், தகவல்களில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம். அதிலிருந்து நாங்கள் மேம்பட்டுள்ளோம். எங்களது வாடிக்கையாளர்களின் தகவலை பிறருக்கு நாங்கள் விற்பதில்லை. கூகுள் நிறுவனம்தான் எங்கள் தொழில் போட்டியாளர். அவர்கள் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகின்றனர். அவர்களைச் சமாளிக்கும் விதமாக நாங்களும் 'ஃபயர் ஃபாக்ஸ் குவான்டம்' என்ற புதிய தொழில்நுட்பத்தை எங்களது வாடிக்கையாளர்களுக்காக கண்டுபிடித்துள்ளோம். இது அவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். எங்களது கவனம் இணையத்தில், கால் வசதி கொண்டு வருவதே. விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி ஆகியவற்றைக் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. புதிய வாடிக்கையாளர்களும் ஃபயர்ஃபாக்ஸ்'ஐ விரும்பும் அளவிற்கு நாங்கள் எங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம்" எனக் கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்