உணவுகளை ஆர்டர் செய்ய இன்று பல செயலிகள் உள்ளன. இந்த செயலிகளை டவுன்லோட் செய்து உணவுகளை ஆர்டர் செய்ய வேண்டும், என்ற நிலையை மாற்றியுள்ளது கூகுள் நிறுவனம். இனி உணவுகளை கூகுள் வழியாகவே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். கூகுள் தேடல், கூகுள் மேப் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஆகியவற்றில் இதனை நாம் செய்து கொள்ளலாம்.
இதற்காக 'ஆர்டர் ஆன்லைன்' என்ற பட்டனை கூகுள் தேடல் மற்றும் கூகுள் மேப்பில் அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் நிறுவனம், இந்த வசதியுள்ள உணவகங்களை தேடும்பொழுது, உபயோகிப்பாளர்களுக்கு, இந்த பட்டன் தென்படும் என கூறியுள்ளது.
டோர்டேஷ் (DoorDash), போஸ்ட்மேட்ஸ் (Postmates), டெலிவரி.காம் (Delivery.com), ஸ்லைஸ் (Slice), மற்றும் சவ்நவ் (ChowNow) என ஐந்து டெலிவரி சேவைகளை கொண்டுள்ள இந்த நிறுவனத்தில், நமக்கு தேவையான சேவை நிறுவனத்தை தேர்வு செய்து உணவுகளை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இந்த ஆர்டர்களுக்கு 'கூகுள் பே' மூலம் பணம் செலுத்திக்கொள்ளலாம் என்ற வசதியையும் ஏற்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.
தன் தளத்தை மாற்றி அமைத்துள்ள இந்த மிகப்பெரிய தேடல் தளமான கூகுள், மொபைல்போன் உபயோகிப்பாளர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் எளிதில் பயன்படுத்தும் வகையிலும் தளத்தை அமைத்துள்ளது.
தற்போதைக்கு அமெரிக்காவில் மட்டுமே இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்