இந்திய ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான எக்ஸ்பிரஸ் பேக்அப் திட்டம் இந்தியாவில் இன்று அறிமுகமானது. முதற்கட்ட சோதனை தேர்வுகளுக்கு பிறகு தற்போது இந்தியாவில் இருக்கும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு இந்த புதிய வசதியை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவல் படி, கூகுளின் போட்களை சேமித்து வைக்க உதவும் இந்த எக்ஸ்பிரஸ் பேக்அப் திட்டம் இந்த வாரத்தில் வெளியாகும். இதை பேக்அப் செட்டிங்கிஸ் தளத்தில் காணலாம்.
கூகுள் நிறுவனம் சார்பில் வெளியான தகவலின் படி இந்த பேக் அப் திட்டம் கூகுள் கிளவுடில் புகைப்படங்களை சேமிக்க நினைத்து டேட்டா கிடைக்காமல் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த எக்ஸ்பிரஸ் பேக்அப் திட்டத்தில் புகைப்படங்கள் குறைவான ரெசலியூஷனில் சேமிக்கும் . இதன் மூலம் குறைவான டேட்டா இருந்தாலும் புகைப்படங்களை ஒருவரால் சேமித்துக் கொள்ள முடிகிறது.
மேலும் வெளியான தகவலின் படி புகைப்படங்கள் 3 மெகா பிக்சலாக குறைந்து சேமிக்கப்படும். இதில் வீடியோக்கள் 480p கிளாரிட்டி வசதியில் சேமித்து வைக்கப்படுகிறது.
இத்துடன் கூகுள் சார்பில் டேட்டா கேப் என்னும் ஒரு புதிய திட்டம் அறிமுகமாகிறது. இதை பயன்படுத்தி ஒரு நாளைக்கு கூகுள் போட்டோஸ் பயன்படுத்தும் டேட்டா அளவை நம்மால் குறைக்க முடியும்.
இந்தியாவில் வெளியாகும் இந்த கூகுள் பேக்அப் வசதி விரைவில் மற்ற நாடுகளில் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்