கூகுளின் தயாரிப்பான 'ஜிமெயில்', கடந்த 2018 ஆம் ஆண்டில் 'ஸ்மார்ட் கம்போஸ்' எழுதும் முறையை கணினிகளில் பயன்படுத்த அறிமுகம் செய்தது. இந்த அப்டேட்டை போனில் வெளியிடாமல் இருந்தது கூகுள். இந்நிலையில், சமீபத்தில் கூகுள் பிக்சல் 3 போன்களில் இந்த ஸ்மார்ட் அமைப்பு பொருத்தப்பட்டது.
கூகுள் பிக்சல் போனில் இடம்பெற்று நல்ல வரவேற்பு பெற்றதால் இந்த ஸ்மார்டாக எழுதும் முறை தற்போது அண்ட்ராய்டு போன்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய அமைப்பு, நமது எழுதும் விதத்தை அறிந்துகொண்டு நாம் அதிகமாக பயன்படுத்தும் வாக்கியம் அல்லது பதில்களை உருவாக்கும். இது நேரத்தை சேமிக்கும் சமயத்தில் எழுத்துப் பிழையையும் குறைக்கிறது. மேலும் இதை விரும்பாதவர்களுக்கு இந்த வசதியை நீக்கிக்கொள்ளும் ஆப்ஷனையும் கூகுள் கொடுத்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்