‘’பப்ஜி கேமை தடை செய்ய வேண்டும்’’ – 11 வயது சிறுவன் வழக்கு

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 2 பிப்ரவரி 2019 12:26 IST
ஹைலைட்ஸ்
  • அஹாத் நிசாம் என்ற சிறுவன் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளான்
  • இந்தியாவில் லட்சக்கணக்கானோர் பப்ஜி கேமை விளையாடி வருகின்றனர்
  • பப்ஜியை தடை செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வலியுறுத்தல்

2018 மார்ச் 19-ல் பப்ஜி கேம் அறிமுகம் செய்யப்பட்டது.

பப்ஜி கேமை தடை செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் 11 வயது சிறுவன் அஹாத் நிசாம் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளான். அவனது தாயார் மூலமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பப்ஜி ('PlayerUnknown's Battlegrounds') கேம் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆன்லைன் விளையாட்டாக மாறியுள்ளது. லட்சக்கணக்கானோர் இந்த விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement

சீனாவின் இண்டர்நெட் மன்னன் 'டென்சென்ட்' பப்ஜி கேமை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்பியுள்ளது. இந்த கேமை 20 கோடிப்பேர் டவுன்லோட் செய்துள்ளனர். தினமும் உலகம் முழுவதும் 3 கோடிப்பேர் இந்த விளையாட்டை விளையாடுகின்றனர்.

இந்த நிலையில் பப்ஜி கேம் வன்முறையையும், கோபத்தையும் தூண்டுவதாக கூறி அதனை தடை செய்ய வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் 11 வயது சிறுவன் அஹாத் நிசாம் வழக்கு தொடர்ந்துள்ளான். பப்ஜி கேமை தடை செய்ய மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவன் வலியுறுத்தியுள்ளான்.

இதுதொடர்பாக சிறுவன் தொடர்ந்திருக்கும் மனுவில், ‘' ஆன்லைன் விளையாட்டுகளுக்கான அற நெறிகளை (Ethics) மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.   இதுதொடர்பாக கமிட்டி அமைக்கப்பட வேண்டும். வன்முறை, வெறுப்புணர்வு, கோபத்தை தூண்டும் பப்ஜி கேமை தடை செய்ய மகாராஷ்டிர அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: PUBG, Supreme Court

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.