'ஃபிளிப்ஸ்டார்ட் டேஸ் சேல்' அதிரடி ஆஃபர்கள் பெறும் முக்கிய தயாரிப்புகள்!

'ஃபிளிப்ஸ்டார்ட் டேஸ் சேல்' அதிரடி ஆஃபர்கள் பெறும் முக்கிய தயாரிப்புகள்!
ஹைலைட்ஸ்
  • ரூ.13,990 முதல் மடிக்கணினிகள் விற்பனை!
  • ஆப்பிள் வாட்ச் 3 ரூ.25,990 முதல் விற்பனை!
  • ஹெட்போன்ஸ் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு தள்ளுபடி!
விளம்பரம்

ஃப்ளிப்கார்ட் தனது வாடிக்கையாளர்களுக்காக 'ஃபிளிப்ஸ்டார்ட் டேஸ் சேல்' விற்பனையை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த சேலின் மூலம் ஏஸ்சிக் வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு 10% தள்ளுபடியும் பெற முடிகிறது. மேலும் இந்த சேலில் போன்கள் மட்டுமின்றி எல்லாவித எலக்டிரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் 80% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனையில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 தயாரிப்புகள் முதல் போன் கேஸ்கள் வரை விற்பனை செய்யப்படுகின்றன.


ஃப்ளிப்கார்ட் சேல் (தள்ளுபடி பெறும் மடிக்கணினிகள்)

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இந்த ஃப்ளிப்கார்ட் சேலில் மடிக்கணினிகள் அதிகளவு தள்ளுபடி பெற்றுள்ளனர். ரூ.13,990 முதல் மடிக்கணினிகள் விற்பனை செய்யப்படும் நிலையில் ஏசர் ஆஸ்பையர் 3 மாடல் ரூ.14,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹெச்பி 13q மாடல் மடிக்கணினி தள்ளுபடி பெற்று ரூ.37,990-க்கு விற்பனை செய்யப்படுகறிது. மேலும் ஹெச்பி-யின் i3 வகை மடிக்கணினி தயாரிப்புகள் ரூ.26,490 முதல் இந்த சேலில் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும் ஏசூஸ் ROG மாடல் தயாரிப்பு ரூ.70,990க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஃப்ளிப்கார்ட் சேல் (டேப்லெட் மாடல்கள்)

இந்த சேலில் டேப்லெட் மாடல்கள் சிறப்பான தள்ளுபடிகளை பெற்றுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் 6-வது தலைமுறை ஐபேட் ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி அல்காடெல் A3 டேப் மாடல் ரூ.9,999க்கும், ஹானரின் மீடியாடேப் T3 மாடல் ரூ.10,999க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

ஃப்ளாப்கார்ட் சேல் (உபகரணங்கள்) 

இந்த சேலில் எம்ஐ பேன்ட் HRX எடிஷன் ரூ.1,299க்கும் எம்ஐ பேன்ட்3 ரூ.1,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல சாம்சங் கேலக்ஸி வாட்ச் தயாரிப்பு தள்ளுபடி பெற்று ரூ.19,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 தயாரிப்பு இந்த சேலில் ரூ.23,990 முதல் விற்பனை செய்யப்படுகிறது. பிரபல ஸ்மார்ட்வாட்ச் நிறுவனமான ஃபிட்பிட் சார்ஜ் 2 தயாரிப்பு தள்ளுபடி போக ரூ.6,499க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இவைகள் மட்டுமின்றி ஹெட்போன்ஸ், ஸ்பீக்கர்கள் போன்ற பல முக்கிய தயாரிப்புகளும் 70% அதிகமாக தள்ளுபடி பெற்று விற்பனை செய்யப்படுகின்றன.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Flipkart, Flipstart Days Sale
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »