ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த வியாழக்கிழமை அன்று 'பேக்கேஜிங்கில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை அகற்றவும், மார்ச் 2021 க்குள் தனது சொந்த விநியோகச் சங்கிலியில் 100 சதவீத மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் நுகர்வு நோக்கி செல்லவும் திட்டமிட்டப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளது.
ஆகஸ்ட் 1, 2019 நிலவரப்படி, அதன் பேக்கேஜிங் மதிப்பு சங்கிலி முழுவதும் பல்வேறு முயற்சிகள் மூலம், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கில் 25 சதவீதம் குறைப்பை அடைந்துள்ளது என்று பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"பிளிப்கார்ட் பேக்கேஜிங்கில் ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக்கை அகற்றுவதற்கும், மார்ச் 2021-க்குள் அதன் சொந்த விநியோகச் சங்கிலியில் 100 சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் நுகர்வு நோக்கி நகர்வதற்கும் ஒரு உறுதிப்பாட்டை எடுத்துள்ளது. பிளிப்கார்ட் சுற்றுச்சூழல் நட்பு காகித துண்டுகளை அறிமுகப்படுத்துதல், பாலிதின் பைகளுக்கு மாற்றாக பதிலாக செய்யப்பட்ட காகித பைகள், குமிழி மறைப்புகள் மற்றும் ஏர்பேக்குகளை அட்டைப்பெட்டி கழிவு துண்டாக்கப்பட்ட பொருள் மற்றும் '2 பிளை' ரோல் ஆகிய மாற்றங்களை கொண்டுவரவுள்ளது" என்று பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் "இந்த உறுதிப்பாட்டின் கீழ், பிளிப்கார்ட் EPR (விரிவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்பு) இதனையும் முன்னெடுத்துள்ளது, அதன்படி முதல் ஆண்டில் 30 சதவிகித சேகரிப்பை மீட்டெடுக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளது. பிளாஸ்டிக் நுகர்வு குறைக்க மறுசுழற்சி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கில் மறுசுழற்சி செய்யப்பட்ட உள்ளடக்கத்தை அதிகரிக்க பிளிப்கார்ட் உறுதியளித்துள்ளது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகளை வைத்து பார்க்கையில் அடுத்த ஆண்டு காலப்பகுதியில், பிராண்டுகளிலிருந்து "ஈகாம் (eComm) ரெடி பேக்கேஜிங்" மற்றும் பேக்கேஜிங்கிற்கான மறுசுழற்சி செய்யப்பட்ட காகித பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக்கைக் குறைக்கும் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் கூடுதல் நடவடிக்கைகளைக் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளிப்கார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் "ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கான மாற்று வழிகளை உருவாக்குவது என்பது ஒரு நிலையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்காக நாங்கள் எடுத்துள்ள குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளில் ஒன்றாகும். எங்கள் நீண்டகால பார்வை பிளாஸ்டிக் பயன்பாட்டை அகற்றுவதும், மறுசுழற்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க பொருட்களின் பயன்பாட்டை அதிகரிப்பதுமே" என்றார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்