ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இந்தியாவில் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையை அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் அறிவிப்பின்படி இந்த விற்பனை ஜூலை 15-ல் துவங்கி, ஜூலை 18 வரை நடைபெறும். இந்த விற்பனையில், எஸ்.பி.ஐ வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஃப்ளிப்கார்ட், எஸ்.பி.ஐ கிரடிட் கார்டுகளுக்கு 10 சதவிகித உடனடி தள்ளுபடியை வழங்கவுள்ளது. அதுமட்டுமின்றி, ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கு, இந்த விற்பனை முன்னதாகவே ஜூலை 15 அன்று காலை 8 மணிக்கு துவங்கிவிடும் என கூறியுள்ளது.
பல சலுகைகளை பெற்றுள்ள இந்த விற்பனையில், டிவி சாதனங்களுக்கு 75 சதவிகிதம் வரை தள்ளுபடி, உடைகள், காலனிகள் போன்ற ஃபேஷன் சாதனங்களுக்கு 80 சதவிகிதம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இந்த விற்பனையில் இடம் பெற்றுள்ள ரியல்மீ ஸ்மார்ட்போன்கள் 7,499 ரூபாய் என்ற விலையிலிருந்து துவங்குகிறது. அதே நேரம் நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற தள்ளுபடி விலையில் விற்பனையாகவுள்ளது. போகோ F1, இன்பினிக்ஸ் நோட் 5 மற்றும் விவோ V9 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது.
விவோ V11, விவோ V11 Pro மற்றும் ஓப்போ F11 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு 2,000 ரூபாய் எக்ஸ்செஞ்ச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனையில் லெனோவா மற்றும் அல்கடெல் டேப்லெட்கள் 6,999 ரூபாய் என்ற விலையிலிருந்தே துவங்குகிறது. மேலும், இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ள சாம்சங் கேலக்சி டேப் A 12,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனையில், ஷூக்களுக்கு 40 முதல் 80 சதவிகிதம், வாட்ச் மற்றும் பேக்களுக்கு 80 சதவிகிதம் என தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி வீட்டு சாதனப் பொருட்களுக்கும் தள்ளுபடியை அறிவித்துள்ள ஃப்ளிப்கார்ட், 40 முதல் 80 சதவிகிதம் வரை தள்ளுபடியில் பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்