ஃப்ளிக்கர் தளத்தில் உங்களுக்கு இன்னும் நிறைய புகைப்படங்கள் இருக்கிறது என்றால் அவைகளை சேமிக்க இன்றே கடைசி வாய்ப்பு.
புகைப்படங்களை பகிரும் தளமான ஃப்ளிக்கர், சில காலத்திற்கு முன்னர் தனது 1 டிபி வரை இருக்கும் சேமிப்புக்களை அழிக்கப்போவதாக தகவலை வெளியிட்டனர். அதைத்தொடர்ந்து ஃப்ளிக்கர் நிறுவனத்தில் சேமிப்புக்களை வைக்க விரும்பும் நபர்கள் வருடத்திற்கு 50 டாலர்கள் செலுத்தி புகைப்படங்களை சேமித்துகொள்ள முடியும். அல்லது 1000 புகைப்படங்களை மட்டுமே சேமித்து ஃப்ளிக்கரில் சேமித்து வைக்க முடியும்.
அந்நிறுவனம் ஒருவர் பதிவிட்ட புகைப்படங்களை தனது சர்வர்களில் சேமித்துகொள்ள முடியும். அப்படி இதுவரை சேமித்த அனைத்து புகைப்படங்களை அளிக்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ள நிலையில் அது முழுமையாக செயல்பட சில நாட்கள் ஆகும்.
ஆனால் இன்றைக்கு, அதை பதிவிறக்கம் செய்து மாற்றி வைக்காமல் இருந்து விட்டால் பின்னர் சேமிக்கவும் முடியாமல் ஆகிவுடும். 50 டாலர்கள் செலுத்தி ப்ரோ அக்கவுண்ட் பெருவதன் மூலம், விளம்பரங்கள் இல்லாமலும், இந்த துறைகளில் இருக்கும் முனைவர்களை சந்திக்கவும் என பல விதமான சேவைகளை ஃப்ளிக்கர் ப்ரோ அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்