இன்றைய அமேசான் பிரைம் டே விற்பனையில் கொடுக்கப்படும் ஆஃபர்கள்

இன்றைய அமேசான் பிரைம் டே விற்பனையில் கொடுக்கப்படும் ஆஃபர்கள்
ஹைலைட்ஸ்
  • அமேசான் பிரைம் டே சேல் 36 மணி நேரத்திற்கு நடைபெறும்
  • இந்த ஆண்டு பிரைம் டேவில் 200க்கும் மேற்பட்ட வெளியீடுகள் அறிமுகமாகின்றன
  • பிரைம் மியூஸிக் ஆஃபர்கள் மற்றும் வீடியோ வெளியீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன
விளம்பரம்

அமேசான் பிரைம் டே 2018 விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கி, புதன்கிழமை ஜூலை 18 அதிகாலை 12 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு, அமேசான் இந்தியாவின் இரண்டாவது எடிஷன் பிரைம் டே சேல் மற்ற நாடுகளில் வருகின்ற அதே தேதியில் இந்தியாவில் வருகிறது. அதற்கு முன்பாக அமேசான் நிறுவனம் ஸ்மேர்ட்ஃபோன், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களின் மீது புதிய ஆஃப்பர்களை வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்களின் படி வீட்டு உபயோகப் பொருட்கள், ஸ்மார்ட் டிவைசஸ், துணிகள், ஹோம் இண்டீரியர்ஸ் உள்ளிட்ட பொருட்களின் மீது அதிக தள்ளுபடிகள் கிடைக்கும். மேலும் இன்று 1 மணி தொடங்கி 6 வெவ்வேறு விதமான ஃபிளாஷ் சேல், மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டு அல்லது ஈ.எம்.ஐ அல்லது அமேசான் பே மூலம் பொருட்களை வாங்கினால் 10% கேஷ்பேக் தள்ளுபடி இருக்கிறது.

பிரைம் டே விற்பனை என்ற பெயரின் படியே, இந்த தள்ளுபடிகளில் பிரைம் உறுப்பினர்களுக்கு என்று பிரத்தியேக ஆஃபர்களும் கொடுக்கப்படுகின்றன. ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் இதே சமயத்தில் தன்னுடைய சிறப்பு விற்பனையை அறிவித்திருக்கிறது. அதன் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் இன்று தொடங்கி வியாழன் ஜூலை 19 வரை நடைபெற இருக்கிறது.

குறிப்பிட்டுள்ளபடி, அமேசான் பிரைம் டே விற்பனை ஜூலை 16, நன்பகல் 12 மணிக்கு தொடங்கி அடுத்த 36 மணி நேரத்திற்கு தொடர்ந்து நடைபெறும். இந்த விற்பனையில் ஆயிரக்கணக்கான ஒன் டே டீல்ஸ் மற்றும் குறுகிய நேர லைட்னிங் டீல்ஸ்களும் அடங்கும். மேலும் வருடத்திற்கு ரூ. 999 செலுத்திய பிரைம் உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். மேலும் இதில் ரூ. 129 மாதாந்திர திட்டம் உள்ளது. ஏர்டெல் நிறுவனம் சில வாடிக்கையாளர்களுக்கு பிரைம் உறுப்பினர் சந்தாவை இலவசமாக தருகிறது. அது போலவே வோடஃபோன் நிறுவனமும் அதனுடைய ரெட் போஸ்ட்பெய்டு பிளானை இலவசமாகவும், ப்ரீபெய்டு பிளானை 50% தள்ளுபடியுடனும் வழங்குகிறது.

முதல் முறையாக 200க்கும் மேற்பட்ட பொருட்கள் அமேசான் விற்பனையில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அமேசான் பிரைம் டே சேலின் ஒரு பகுதியாக ஒன்ப்ளஸ், சென்ஹெய்ஸர், கோத்ரேஜ், க்ளவுட்வாக்கர், சாம்சங் மற்றும் இதர நிறுவனங்கள் வீடு மற்றும் கிச்சன், டெய்லி நீட்ஸ், ஃபேஷன், லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். மேலும் ஒரு ஆப்-ஒன்லி போட்டியின் மூலம் ஒரு ஒன்ப்ளஸ் 6 வெல்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இந்த சேல் ஒன்ப்ளஸ், விவோ, சாம்சங், மோட்டரோலா, ஹூவாய் உள்ளிட்ட மாடல் ஸ்மார்ட்ஃபோன்களிலும் பல்வேறு ஆஃபர்கள் கத்திருக்கிறது.

மொபைல் ஃபோன்கள் மீது இன்றைய அமேசான் சேல் ஆஃபர்கள்:

அமேசான் பிரைம் டே டீல்களில், மோட்டோ ஜீ5 ப்ளஸ், சாம்சங் கேலக்ஸி ஒன்7 பிரைம், ஹூவாய் பி20 ப்ரோ, ஹூவாய் பி20 லைட் மற்றும் இன்ஃபோகஸ் டர்போ 5 உள்ளிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் மீது விலை குறைய இருக்கிறது. மேலும் மோட்டோ ஜீ6, ஒன்ப்ளஸ் 6, சாம்சங் கேலக்ஸி நோட் 8 (எக்ஸ்சேஞ்சில் கூடுதலாக ரூ. 10000 தள்ளூபடி), விவோ வி7+, மற்றும் விவோ வி9 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் எக்ஸ்சேஞ்சில் கூடுதல் தள்ளுபடி வழங்க இருக்கிறது. ஹானர் மொபைல் ஃபோன்களும் தள்ளுபடியில் கிடைக்க இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஹானர் வியூ10, ரூ. 6000 தள்ளுபடியில் ரூ. 29,999ற்கு கிடைக்க இருக்கிறது. ஹானர் 7சி 32 ஜீபி ரூ. 9,499க்கும் (எம்ஆர்பி ரூ. 12,999) மற்றும் 64 ஜீபி மாடல் ரூ, 11,499க்கும் (எம்ஆர்பி. 14,999) கிடைக்க இருக்கிறது. இறுதியாக ஹானர் 7 எக்ஸ் 32 ஜீபி மாடல் ரூ. 11,999க்கும் (எம்ஆர்பி ரூ. 13,999), 64 ஜீபி மாடல் ரூ. 13,999க்கும் (எம்ஆர்பி ரூ. 16,999ற்கும் கிடைக்கும். அமேசான் சேலில் பவர் பேங்க், கேஸ், கவர்ஸ், ஸ்க்ரீன் ப்ரொடெக்டர்ஸ் மற்றும் டேட்டா கேபிள்களின் மீது 80% தள்ளுபடி இருக்கிறது.

அமேசான் ப்ரைம் டே சேலின் ஒரு பகுதியாக அமேசான் அதனுடைய ஆப் பயன்பாட்டாளர்களுக்கு ஒரு க்விஸ் போட்டி அறிவித்திருக்கிறது. அதில் ஒன்ப்ளஸ் 6 வெல்ல வாய்ப்பிருக்கிறது. இதில் 5 கேள்விகள் கேட்கப்படும், அதற்கு நீங்கள் சரியாக பதில் அளித்துவிட்டீர்கள் என்றால், ஒரு லக்கி டிராவில் பெயர் சேர்க்கப்பட்டு ஒரு ஒன்ப்ளஸ் 6 வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. தனியாக ஒன்ப்ளஸ் 6 ரெட் மாடல் ரூ. 2000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது தவிர, அமேசானின் பிரத்தியேக ரெட்மி ஒய்2 ஜூலை 16, 1மணிக்கு விற்பனைக்கு வரவிருக்கிறது. குறிப்பிட்டுள்ளதைப் போல, அமேசான் நிறுவனம் ஹச்டிஎஃப்சி வங்கி உடன் சேர்ந்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வைத்துள்ளவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்குகிறது. இது ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். அனைத்து அமேசான் பே பயனர்களுக்கும் 10% கேஷ்பேக் கிடைக்கும், மற்றும் மாதம் ரூ. 1,111ல் தொடங்கும் வட்டியில்லாத ஈஎம்ஐ தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு பொருந்தும். மேலும் பழைய மொபைல் ஃபோன்கள் எக்ஸ்சேஞ் செய்து புதிய ஃபோன் வாங்குவதற்கு கூடுதலாக ரூ. 3000 தள்ளுபடி வழங்குகிறது.

மேலும் அமேசான் பிரைம் வீடியோவிற்கு, தினசரி ஒரு தலைப்பு என ஏழு தலைப்பு சேர்க்க இருக்கிறது. இதில் டன்கிர்க், 102 நாட் அவுட், காமிஸ்தான், ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்: தி லாஸ்ட் நைட் மற்றும் சிலவும் அடங்கும். அமேசான் ப்ரைம் ம்யூஸிக்கிலும் ஜூலை 3 முதல் ஜூலை 15 வரை மூன்று பாடல்கள் ப்ளே செய்து எக்கோ டாட் வெல்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. கூடுதலாக, ஃபையர் டிவி ஸ்டிக் மற்றும் எக்கோ உள்ளிட்ட அமேசான் டிவைசஸ்களும் பிரத்தியேகமான ஆஃப்பர்கள் வழங்க இருக்கிறது. இது ப்ரைம் நவ் ஆப்பில் ரூ. 100 கேஷ்பேக் மற்றும் மளிகை சாமான் உள்ளிட்ட பொருட்கள் மீது 40% தள்ளுபடி மற்றும் கூடுதல் தள்ளுபடி மற்றும் கூப்பன்களும் அடங்கும்.

குறிப்பாக அமேசான் பிரைம் உறுப்பினர்கள் ஃப்ரீ ஒன் டே டெலிவரி, அதே நாளில் டெலிவரி, பிரைம் வீடியோ, பிரைம் மியூஸிக், பிரத்தியேக டீல்கள் மற்றும் பிரைம் நவ்வில் இரண்டு மணி நேரத்துக்குள் டெலிவரி ஆகியவை கிடைக்கும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Amazon Prime Day, Prime Day 2018, Amazon Sale, Amazon Prime Day Sale
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »