தீபாவளி ஷாப்பிங் களைகட்டுவது போல, ஜூலை 16 ஆம் தேதி நடைப்பெற உள்ள அமேசான் ப்ரைம் தின ஷாப்பிங்கும் வாடிக்கையாளரிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 36 மணி நேரங்கள் நடைப்பெறும் இந்த விற்பனையில், அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேக தள்ளுபடிகள் தயாராகி வருகின்றன.
இந்தியாவில் இரண்டாவது முறையாக ப்ரைம் தின விற்பனை நடைப்பெற உள்ளது. “இந்த ஆண்டு ப்ரைம் விற்பனையில் 200-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் இதில் அறிமுகப்படுத்த உள்ளோம். மேலும், உலகின் பல முன்னணி பிராண்டுகளையும் ப்ரைம் தின விற்பனையில் வாடிக்கையாளர்கள் வாங்கி மகிழலாம். உள்ளூர் சந்தையில் இருந்தும் பல விற்பனையாளர்கள் ப்ரைம் தினத்தன்று பொருட்களை வெளியிடுகின்றனர்” என்று அமேசானின் இந்திய இயக்குநர் அக்ஷய் சஹி தெரிவித்தார்.
சத்யா பால் முதல் தி சென்னை சில்க்ஸ் என உள்ளூர் பிராண்டுகளும் விற்பனைக்கு வர உள்ளன. அமேசான் லான்ச்பாட் தளத்தில் புதிய பொருட்கள் விற்பனைக்கு வருகிறது.
அமேசான் ப்ரைம் தின சிறப்பு விற்பனை
அதிரடி தள்ளுபடியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளன. “சர்வதேச பிராண்டுகள், சர்வதேச விற்பனையாளர்கள் அமேசான் பிரைம் தினத்தில் பங்கேற்க உள்ளனர்” எனவும் அக்ஷய் சஹி கூறினார்.
ஜூலை - 16 ஆம் தேதி மதியம் 12 மணி முதல், அடுத்த நாள் நள்ளிரவு 12 மணி வரை இந்த ப்ரைம் தின விற்பனை நடைப்பெற உள்ளது. ப்ரைம் தின விற்பனையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் அமேசான் ப்ரைம் ஒரு மாத சந்தாவை அறிமுகம் செய்தது. இதன் மூலம், அமேசான் வீடியோ, அமேசான் மியூசிக் ஆகிய பயன்பாடுகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.
“இந்தியா போன்ற நாடுகளில் மியூசிக், திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு ப்ரைம் தின சிறப்பாக ஏழு டைட்டில்கள் வெளியிடப்பட உள்ளது” என்று தெரிவித்தார் சஹி.
மேலும், மேற்கு சந்தைகளில் உள்ள பிரைம் போட்டோஸ், ப்ரைம் ரீடிங் போன்ற பயன்பாடுகளும் இந்தியாவிலும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர்
அமேசான் ப்ரைம் தினம், விஆர் எடிஷன்
டெல்லி, பெங்களூரு, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற குறிப்பிட்ட நகரங்களில் அமேசான் ப்ரைம் தின எக்ஸ்பீரியன்ஸ் சோன் அமைக்கப்பட்டுள்ளது. இதில், விர்சுவல் ரியாலிட்டி அனுபவம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அமேசான் சோன்களில் ப்ரைம் தின விற்பனையில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
“புதிய பொருட்களை ஆன்லைனில் அறிமுகம் செய்யும் போது, கண்ணில் பார்க்காத பொருட்களை எப்படி வாங்குவது என்ற அச்சம் மக்களிடம் இருக்கும். எனவே, இந்த சந்தேகங்களை நீக்கும் வகையில் வி.ஆர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பொருட்களை தொட்டு பார்க்கும் அனுபவம் கிடைக்கிறது.” என்று சஹி தெரிவித்தார்.
அமேசான் ப்ரைம் சோன்களில், ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும், பொது வாடிக்கையாளர்களும் இதில் கலந்து கொள்ளலாம். மேலும், ப்ரைம் தின விற்பனைக்கு முதல் நாள் வரை, விருப்பமுள்ளவர்கள் அமேசான் ப்ரைம் உறுப்பினராக இணையலாம்
20 மில்லியன் க்யூபிக் ஃபீட்டில், நாடெங்கும் 67 ஃபுல்பில்மெண்ட் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், நாட்டில் உள்ள பல பகுதிகளுக்கு இரண்டு மணி நேர டெலிவரி வசதி கொண்டுவரப்படும். அமேசான் நவ் பயன்பாடு மூலம் வேகமான டெலிவரி வசதியையும் வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். இதன் மூலம் 36 மணி நேர ப்ரைம் தின விற்பனை முடியும் முன்னே, பொருட்கள் வாடிக்கையாளரை அடைந்திருக்கும். ஆக, வாடிக்கையாளர்களுக்கு திருவிழா அனுபவத்தைத் தர தயாராகி விட்டது அமேசான்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்