அமேசான் விற்பனை இணையதளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட பிரைம் டே சலுகை விற்பனையில் 4.2 பில்லியன் அளவுக்கு நடந்துள்ளதாக பொருளாதார வல்லுநர் மைக்கேல் பாட்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அமேசான் இணையதளத்தில் தொடங்கிய இந்த பிரைம் டே விற்பனை 36 மணி நேரம் நீடித்தது. உலகம் முழுவதும் 17 நாடுகளில் தொடங்கப்பட்ட இந்த விற்பனையில், பல வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர்.
இந்த முறை பிரைம் டே விற்பனை கடந்த ஆண்டை விட 33% அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமேசான் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவல்களையும் வெளியிடாத நிலையில், மைக்கேல் பாட்சர் என்கிற பொருளாதார வல்லுநர் இந்த விற்பனை குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், அமேசான் தளத்தில் பிரைம் டே விற்பனையில் 4.2 பில்லியன் (சுமார் 28,900 கோடி) விற்பனை நடந்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முதல் 1 மணி நேரத்தில் 1 பில்லியன் அளவுக்கு பொருட்கள் விற்கப்பட்டுள்ளதாகவும், தொழிற்நுட்ப கோளாறு பல இடங்களில் ஏற்பட்டதால் சிறிது விற்பனை பாதிக்கப்பட்டுள்ளாதகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அழகு சாதனப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் அதிக அளவு விற்பனை ஆகியுள்ளது. இதன் மூலம் அமேசான் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் வருகை மற்றும் விளம்பரதாரர்களுக்கான கட்டணம் என பல்வேறு வகையில் வருமானம் அதிகரித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்