கேரள மழை வெள்ளத்தில், மிகத் தீவிரமாக மீட்புப் பணிகள் நடந்து வரும் போதும் நேற்று ஒரு நாள் மட்டும் 30 பேர் பலியாகியுள்ளனர். பிரதமர் மோடி இன்று கேரளா வருகிறார். நாளை காலை விமானம் மூலம் பாதிப்புகளை பார்வையிடுகிறார். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை, இயல்பை விட 10 மடங்கு அதிகமாகும். சனிக்கிழமை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை 167 பேர் பலியாகியுள்ளனர். கூடுதல் கடல் படை மற்றும் விமானப்படை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இன்று பிரதமர் மோடி, கேரளாவுக்கு சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்.
மாநிலம் முழுவதும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் மாநிலத்தில் சேதாரம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநில மக்களுக்கு உதவ இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் முன் வந்துள்ளது.
இது குறித்து அமேசான் இணையதளத்தில் மக்கள், நிவாரண நிதி செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அமேசான் முகப்புப் பக்கத்தில், ‘கேரளாவில் வெள்ளம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமேசான் நிறுவனம் பலகட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது. உங்களின் உதவி மூலம் பாதிப்படைந்த மக்களுக்கு எங்களால் உடனடி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டு, நிவாரண நிதி செலுத்துவதற்கான வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. இது அனைவரும் கை கொடுக்க வேண்டிய நேரம் மக்களே.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்