பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இணையதள ஷாப்பிங் சேல் 2018 அமேசானின் ப்ரைம் தின விற்பனையின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
அமேசான் இந்தியா ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக விற்பனை வரும் ஜூலை 16 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஜூலை 18 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை கிடைக்கும்.
ஜூலை 16 ஆம் தேதி மதியம் 1 மணி முதல், ஆறு வகை ப்ளாஷ் சேல்கள் நடைப்பெற உள்ளன. ப்ரைம் தின விற்பனையில், எச்டிஎப்சி வங்கி கார்டுகளில், இஎம்ஐ அல்லது அமேசான் பே பரிவர்தனையில் 10% பணம் திரும்ப அளிக்கப்பட உள்ளது.
முக்கியமாக, 200க்கும் மேற்பட்ட பொருட்கள் இந்தியாவில் முதன் முறையாக ப்ரைம் தின விற்பனைக்கு வர உள்ளது. ஒன்ப்ளஸ், சென்ஹெய்சர், WD, காட்ரேஜ், க்ளவுட் வாக்கர், சீகேட், சாம்சங் ஆகிய நிறுவனங்களில் இருந்து புதிய பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளன. ‘அமேசான் இந்தியா ஆப் ஒன்லி’ போட்டியின் மூலம் கலந்து கொள்பவர்கள், ஒன்ப்ளஸ் 6 போன் வெல்லும் வாய்ப்புகளும் உள்ளது.
அமேசான் ப்ரைம் வீடியோ வாடிக்கையாளர்களுக்காக, ஜூலை 10 ஆம் தேதி முதல் ஏழு புதிய படங்கள் வெளியாக உள்ளன. டன்க்ரிக், 102 நாட் அவுட், காமிக்ஸ்தான், ட்ரான்ஸ்பார்மர்ஸ் மற்றும் பல வெளியாக உள்ளன. அமேசான் ப்ரைம் மியூசிக் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை எக்கோ டாட்ஸ் வெல்லும் வாய்ப்புகள் உள்ளது.
அமேசான் டிவைஸ்களான பையர் டிவி ஸ்டிக், எக்கோ அகியவை சிறப்பு தள்ளுபடி பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், ‘அமேசான் நவ்’ ஆப்பில் 100 ரூபாய் கேஷ் பாக் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது.
அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள், தற்போது பெற்று வரும் ஒரு நாள் டெலிவரி, ஆர்டர் செய்த அன்றே டெலிவரி, ப்ரைம் வீடியோ, ப்ரைம் மியூசிக், எக்ஸ்க்ளூசிவ் டீல்ஸ், ப்ரைம் நவ்வின் இரண்டு மணி நேர டெலிவரி ஆகிய வசதிகளை தொடர்ந்து பெறலாம்.
அமெரிக்காவை பொறுத்த வரை, அமேசான் ப்ரைம் தின விற்பனை ஜூலை 16 ஆம் தேதி மாலை 3 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்