அமேசான் பிரைம் டே விற்பனையின் இரண்டாவது மற்றும் கடைசி நாளில் பலதரப்பட்ட பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அமேசான் அறிவித்துள்ளது.இந்த சலுகைகள் இன்று நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே. புதிதாக பொருட்கள் ஏதாவது வாங்க நினைப்பவர்களுக்கு இது மிகப்பெரிய பரிசாக இருக்கும்.
இந்த விற்பனையில் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு உடனடி சலுகையும், ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்தி பொருட்கள் வாங்குபவர்களுக்கு 10% கேஷ் பேக் மற்றும் 50,000 ரூபாய்க்கு பொருள் வாங்குவார்கள் 1,700 ரூபாய் தள்ளுபடியும், 8,250 ரூபாய் கேஷ்பேகும் உள்ளது. அமேசான் பே பேலன்ஸ் பயன்படுத்தி பொருள் வாங்கினால் 10% கேஷ்பேக்.
இன்றைய அமேசான் பிரைம் டே மொபைல் ஆஃபர்கள்
ஹானர் 7x (4GB ரேம் 64 GB மெமரி ), கொண்ட ஸ்மார்ட் போன் 14,999 ரூபாயிலிருந்து 13,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹுவாய் p20 லைட் ஸ்மார்ட்ஃபோன், அதன் அறிமுக விலை 19,999-ல் இருந்து 17,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஒன்பிளஸ் 6 ரெட், இந்தியாவில் முதன்முதலாக விற்பனையை தொடங்குகிறது. அதன் விலை 39 ,999 ரூபாய் ஆகும். எக்ஸ்சேஞ் விலையாக 2000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெட்மி Y2 ஃபிளாஷ் சேல் ஜூலை 16 முதல் 17 மதியம் 12 மணி வரை விற்பனை செய்யப்பட உள்ளது. சாம்சங் பிரீமிய கேலக்ஸி நோட் 8 சிறந்த விலையாக 67,900 ரூபாயில் இருந்து 55,990 ரூபாய்க்கு கிடைக்கிறது.
விவோ போன்களுக்கு 3,000 ரூபாய் வரை தள்ளுபடியும், எக்ஸ்சேஞ்சுக்கு 6,000 ரூபாயும் கிடைக்கும். மோட்டோ G6 போனுக்கு, கூடுதலாக 2000 ரூபாய் கிடைக்கும். மோட்டோ E5 பிளஸ் போனுக்கு, எக்ஸ்சேஞ் விலை 1,000ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. ஓப்போ மொபைல்களுக்கு 4000 ரூபாய் தள்ளுபடியும் எக்ஸ்சேஞ்சும், 3,000 ரூபாய் வரை சலுகையும் அளிக்கப்படுகிறது. சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு 10,700 ரூபாய் வரை ஆஃபரும், 10,000 ரூபாயும் எக்ஸ்சேஞ்சும் கொடுக்கப்படுகிறது.
போஸ் QC25 பிரைம் டே சிறப்பு சலுகையாக 12,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேனான் தொடக்க நிலை EOS 1300D 20,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது மாலை 6 மணிக்கு துவங்கும் ஃபிளாஷ் சேலில், ஒரு டிவிக்கான பணம் கொடுத்து இரண்டு டிவிகளை பெற்றுக்கொள்ளலாம். மற்றொரு ஃபிளாஷ் சேலில் டி.சி.எல் 75 இன்ச், ஸ்மார்ட் டி.வி 32,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அமேசான் பொருட்களின் மீதும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எக்கோ டாட் 2,449 ரூபாய் சிறப்பு விலைக்கும், எக்கோ ஸ்போர்ட். கிண்டில் ஒயிட் பேப்பர் வைஃபை 25 சதவீதம் தள்ளுபடியுடனும், எல்லா புதிய கிண்டில்களுக்கும் 20 சதவீதம் தள்ளுபடியும், கிண்டில் ஒயாசிஸுக்கு 15 சதவீதம் தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. அமேசான் பிரைம் கிண்டில் கிரெடிட்ஸ் மூலம் பொருள் வாங்குபவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியும் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நபருக்கு 100 ரூபாய் கேஷ் பேக்கும் அறிவித்துள்ளது அமேசான். அமேசான் ஃபையர் டி.வி ஸ்டிக் 2,799 ரூபாய்க்கு கிடைக்கிறது.
கேமரா, டி.வி, லேப்டாப், டேப்ளட் புளூடூத் ஸ்பீக்கர் ஆகியவற்றுக்கு 70 சதவீதம் தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது.
மின்னணு பொருட்கள் எம்.ஐ பவர் பேங்க் 899 ரூபாயில் கிடைக்கிறது. சென்ஹெய்சர் மற்றும் போஸ் ஆடியோ பொருட்களுக்கு 50 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது DSLR கேம்ராவுக்கும் சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது. சீகேட், டெல், ஹெச்.பி, லெனோவோ போன்ற லேப்டாப்களுக்கும் 55 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. திங்கள் நள்ளிரவிலிருந்து சில பொருட்களுக்கு 30% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
துணிகளுக்கும் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்