அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் தங்களுடைய வருடாந்திர சலுகை விலை விற்பனையை இந்த வார இறுதியில் தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இதில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2018 சேலானது அக்.10 புதனன்று நள்ளிரவு 12 மணி அளவில் தொடங்கி அக்.15 இரவு 11.59 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்கள் 12 மணி நேரம் முன்னதாகவே பெறும் வகையில் அக்.9ஆம் தேதி பிற்பகல் 12 மணி அளவில் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதல் சலுகையாக எஸ்பிஐ டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்துபவர்களுக்கு 10 சதவீத உடனடி சலுகை வழங்கப்படுகிறது.
அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஒரு முறை ஸ்கிரீன் மாற்றித்தரப்படும் என அமேசான் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது. இதனுடன், கூடுதலாக ரூ.1 செலுத்தி சேத பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் அமேசான் நிறுவனம் முதல் முறை ஆர்டர் செய்யும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச டெலிவரியும் அறிவித்துள்ளது.
இதில் அமேசான் நிறுவனம் ஒன் பிளஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒன் பிளஸ் 6 மொபைலுக்கு ரூ.5000 சலுகை வழங்கி ரூ.29,999 பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. வரவிருக்கும் ஒன் பிளஸ் 6T மொபைலுக்கும் இந்த சலுகை பொருந்தும் என அமேசான் அறிவித்துள்ளது.
மற்ற மொபைல் போனுக்கான சலுகைகளை பொருத்தவரையில், ஹானர் 7x ரூ.9,999க்கும், ஹூவாவே p20லைட் ரூ.15,999க்கும், விவோ y83 ரூ.13,990க்கும், மோட்டோ ஜி5 பிளஸ் ரூ.9,999க்கும் ஹானர் பிளே ரூ.18,999க்கும், ஹீவாவே நோவா 3i ரூ.17,990க்கும் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி s9 விலையானது ரூ.42,990த்தில் இருந்து தொடங்குகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ரெட்மி 6A மொபைலானது அதன் பழைய விலையான ரூ.5,999க்கே கிடைக்கிறது. மேலும், இதில் முதன்முறையாக விவோ v9ப்ரோ ரூ.17,990க்கு கிடைக்கிறது. ரியல் மி மற்றும் ரெட்மி y2 குறித்த எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் 1 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் போன்களுக்கான உபகரணங்கள் ரூ.89 முதல் கிடைக்கிறது. பவர் பேங்குகள் ரூ.399 முதல் கிடைக்கிறது. ஹெட்செட், டேட்டா கேபிள்கள் ரூ.89 முதல் கிடைக்கிறது.
அமேசான் கருவிகளான, ஸ்மார்ட் ஸ்பிக்கர்ஸ், பையர் ஸ்டிக், அமேசான் கிண்டல் உள்ளிட்டவைகளும் இந்த கிரேட் இந்தியன் சேலில் இடம்பெறுகிறது. அமேசன் பையர் ஸ்டிக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஹங்காமா, சோனி லைவ், யப் டிவி போன்றவற்றின் சிறப்பு ஆஃபர்களும் கிடைக்கின்றன. எக்கோ கருவிகளை பொருத்தவரையில் பெரும்பாலான தொகை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிண்டல் உபகரணங்களுக்கு 50 சதவீதம் சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரேட் இந்தியன் சேலில் மற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பொருத்தவரையில், லேப்டாப்களுக்கு ரூ.55,000 வரை சலுகை கிடைக்கிறது. கேமராக்கள் இஎம்ஐ இல்லாமல் கிடைக்கிறது. பிரிண்டர்களுக்கு 50 சதவீதம் வரை சலுகை கிடைக்கிறது. எம்.ஜ டிவி ப்ரோ சிரிஸ் வகைகளும் இந்த சலுகை விலை விற்பனையில் கிடைக்கிறது. பிரைம் வாடிக்கையாளர்கள் அக்.9 அன்று இரவு 9 மணி முதலும், மற்ற வாடிக்கையாளர்கள் அக்.10 காலை 11 மணி முதல் எம்.ஐ டிவிக்களை சலுகை விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
இதைத்தவிர்த்து, அமேசான் இணையதளமானது டிவி மற்றும் வாஷிங் மெஷின்களுக்கு ஒரேநேரத்தில் டெலிவரி மற்றும் இன்ஸ்டாலேஷன் சர்வீஸையும் வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்