ஜியோ டிவி-யில் புதிய ‘தமிழ் HD சேனல்’ - முழு விவரம் உள்ளே!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 20 ஏப்ரல் 2019 12:46 IST
ஹைலைட்ஸ்
  • ஜியோ தமிழ் ஹிட்ஸ் HD என்பதுதான் புதிய தமிழ் சேனலின் பெயர்
  • ஜியோ டிவி-யில், சுமார் 600 சேனல்கள் உள்ளன
  • 4 HD சேனல்கள் ஜியோ டிவி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது

இந்த புதிய சேனல்களும் பிக்சர்-இன்-பிக்சர் முறையில் பார்க்க முடியும்.

ஜியோ டிவி செயலியை வைத்திருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி. எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி ஜியோ டிவி, 4 புதிய HD சேனல்களை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் டிவி சேனல்களுக்கான கட்டணங்களை அரசு மாற்றியமைத்தது. இதனால், பல நிறுவனங்களும் பல அதிரடி ஆஃபர்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. ஜியோ நிறுவனம், ஏற்கெனவே தனது ஜியோ டிவி ஆப் தளத்தில் பல சேனல்களின் சேவைகளை பயனர்களுக்கு கொடுத்து வருகிறது. இந்நிலையில் மேலும் 4 HD சேனல்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 

ஜியோ பாலிவுட் ப்ரீமியம் HD, ஜியோ பாலிவுட் கிளாசிக் HD, ஜியோ தமிழ் ஹிட்ஸ் HD மற்றும் ஜியோ தெலுங்கு ஹிட்ஸ் HD ஆகிய சேனல்கள்தான் தற்போது ஜியோ டிவி செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ஜியோ பாலிவுட் ப்ரீமியம் HD சென்ற வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. மற்ற சேனல்கள் இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும். 

இந்த புதிய சேனல்களின் அறிமுகம் மூலம் ஜியோ டிவி-யில், அந்நிறுவனம் சார்பில் மட்டும் 16 பிரத்யேக சேனல்கள் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த புதிய சேனல்களும் பிக்சர்-இன்-பிக்சர் முறையில் பார்க்க முடியும். இந்த வசதியின் மூலம் ஒரு டிவி சேனலைப் பார்த்துக் கொண்டே போனில் மற்ற பணிகளை செய்ய முடியும்.

ஜியோ டிவி, சுமார் 600 சேனல்களை தங்களது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆப் மூலம் கேட்ச் அப் டிவி, ரெக்கார்டு செய்வது, பாஸ் செய்வது போன்ற விஷயங்களை செய்ய முடியும். ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, போஜ்புரி, பஞ்சாபி, மலையாளம், அசாமீஸ், ஒடியா, உருது போன்ற மொழிகளில் ஜியோ டிவி சேனல் சேவைகளை வழங்கி வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களில் மட்டும் தற்போது இந்த செயலி கிடைக்கப் பெறுகின்றது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.