நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடந்த புதங்கிழமையன்று வெளியிட்டிருந்த தகவலின்படி, இந்தியாவில் குறைந்த விலையில் 'மொபைல் ஒன்லி' திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது. இந்த நிறுவனம், கடந்த மார்ச் மாதம் 250 ரூபாய் அளவிலான ஒரு மாத சந்தா திட்டத்தை சொதனை செய்துகொண்டுள்ளதாக கூறியிருந்தது. நெட்பிளிக்ஸின் இந்த திட்டம், இதன் போட்டியாளர்களான அமேசான், ஹாட்ஸ்டாரை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
'பல மாத சோதனைகளுக்கு பிறகு, இறுதியாக இந்த குறைந்த விலை மொபைல் ஸ்கீரின் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறோம்' என நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் கூறுகையில்,"இந்த ஆண்டின் மூன்றாம் பகுதியில் அறிமுகமாகவுள்ள இந்த திட்டம், இந்தியாவில் நெட்பிளிக்ஸிற்கு பல புதிய பார்வையாளர்களை கொண்டுவரும் என நாங்கள் நம்புகிறோம்' எனக் கூறியுள்ளது.
நெட்பிளிக்ஸ் தற்போது, 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையில் 3 மதங்களுக்கான திட்டத்தை வைத்துள்ளது.
ஹாட்ஸ்டாரும், இதே போன்று ஒரு மாத திட்டத்தை 299 ரூபாய் என்ற விலையில் வாடிக்கையாளர் பயன்பாட்டிற்காக வைத்துள்ளது.
முதலில் இந்தியாவில் மட்டுமே அறிமுகமாகியுள்ள இந்த திட்டத்திற்கான வரவேற்பு எம்மாதிரி இருக்கிறது என்பதை வைத்துதான், உலக முழுவதும் இந்த திட்டத்தை விரிவு படுத்தலாமா, இல்லை வேண்டாமா என முடிவெடுக்கப்படும் என நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.
ஸ்கேர்டு கேம்ஸ், டெல்லி கிரைம் என பல ப்ளாக்பஸ்டர் தொடர்களை நெட்பிளிக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்கேர்டு கேம்ஸின் இரண்டாவது பாகம் கூட வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
'இந்தியாவில் வளர்ச்சி என்பது மாரத்தான் போல. நாங்கள் அதில் நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கிறோம்' என நெட்பிளிக்ஸின் தலைமை உள்ளடக்க அதிகாரி டெட் சரண்டோஸ் கூறியுள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்