மேற்கு வங்கத்தில் சீனாவை கண்டித்து ஜொமேட்டோ ஊழியர்கள் டி-ஷர்ட்டை எரித்து போராட்டம்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 29 ஜூன் 2020 16:23 IST
ஹைலைட்ஸ்
  • Some agitators claimed they have quit their jobs
  • A protester said they were ready to starve but wouldn't work for Zomato
  • In May, Zomato laid off 520 employees

கடந்த மே மாதத்தில் ஜொமேட்டோ நிறுவனம் 520 ஊழியர்களை  பணி நீக்கம் செய்தது.  

எல்லைப் பகுதியான லடாக்கின் கால்வானில் கடந்த 15-ம்தேதி இந்தியா - சீனா ராணுவத்திற்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சீனா முதலீடு செய்திருக்கும் நிறுவனமான ஜொமேட்டோவின் ஊழியர்கள் மேற்கு வங்கத்தில் ஜொமேட்டோ டி-ஷர்ட்டுகளை எரித்து போராட்டம் நடத்தினர்.

கொல்கத்தாவின் தெற்கில் இருக்கும் பெகாலா என்ற  இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்ற சிலர் ஜொமேட்டோவை விட்டு விலகி விட்டதாகவும் கூறினர்.

மக்கள் சீன முதலீட்டு நிறுவனமான ஜொமேட்டோவில் இருந்து உணவு ஏதும் ஆர்டர் செய்யக் கூடாது என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.  

சீனாவின் அலிபாபா  நிறுவனத்துடைய பங்குதாரரான ஆன்ட் பைனான்சியல், கடந்த 2018-ல் ஜொமேட்டோ நிறுவனத்தில் 210 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளது. சமீபத்தில் கூடுதலாக 150 மில்லியன் டாலரை ஆன்ட் பைனான்சியலிடம் இருந்து ஜொமேட்டோ பெற்றது குறிப்பிடத்தக்கது. 

சீன நிறுவனங்களில் இந்தியர்களிடம் இருந்து  லாபம் பெறுகின்றன.  ஆனால் எல்லையில் சீன ராணுவம் இந்திய  வீரர்களை கொல்கிறது.சீனா இந்தியாவை அபகரிக்கப் பார்க்கிறது. இதை அனுமதிக்க கூடாதென போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர்.

கடந்த மே மாதத்தில் ஜொமேட்டோ நிறுவனம் 520 ஊழியர்களை  பணி நீக்கம் செய்தது.  கொரோனா பாதிப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Zomato, Ant Financial
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஐபோன் 18 ப்ரோ கசிவு: அறிமுகத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே மீண்டும் 'டீப் ரெட்' நிறம் குறித்த தகவல்
  2. லுமியோ விஷன் 9 (2026) இந்திய அறிமுகம் குறித்த டீசர் வெளியீடு; அமேசான் விற்பனை உறுதி
  3. சியோமி TV S மினி LED (2026): 55, 65, 75-இன்ச் மாடல்கள் ஏப்ரல் 15 அன்று இந்தியாவில் அறிமுகம்
  4. இந்தியாவில் ரூ. 25,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த லேசர் பிரிண்டர்கள்
  5. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ இந்திய அறிமுகம் நெருங்குகிறது: பிளிப்கார்ட்டில் புதிய டீசர்கள் வெளியீடு
  6. அறிமுகத்திற்கு முன் ஓப்போ Find X9 Ultra வடிவமைப்பு கசிவு; ஹஸல்பார்ட் எர்த் எக்ஸ்ப்ளோரர் மாஸ்டர் செட் அறிவிப்பு
  7. ரெட்மி K90 மேக்ஸ் அறிமுகத் தேதி உறுதி: டிஸ்ப்ளே சிறப்பம்சங்களை வெளியிட்டது நிறுவனம்
  8. விவோ X300 FE ஜெய்ஸ் டெலிஃபோட்டோ எக்ஸ்டெண்டர் கிட் உடன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்: புதிய தகவல் வெளியீடு
  9. ரெட்மி A7 ப்ரோ 5G இந்தியாவில் அறிமுகம்: 32 மெகாபிக்சல் கேமரா, யுனிசோக் T8300 SoC; விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  10. இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ அறிமுகம்: ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 6,500mAh பேட்டரி வசதி கொண்டது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.