யூடியூப் சார்பில் யூடியூப் மியுசிக் மற்றும் யூடியூப் பீரிமியம் போன்ற புதிய சேவைகள் இந்த மாத்ததின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. உலகம் முழுவதும் இந்த சேவைகள் வெளியாகியுள்ள நிலையில் இனிவரும் காலத்தில் கூகுள் ப்ளே மியுசிக் ஆப்பிற்கு பதிலாக யூடியுப் மியூசிக் இடம் பெறலாம் எனத் தகவல் கசிந்துள்ளது.
மேலும் இந்த யூடியூப் மியூசிக், பாடல்களை ஆன்லைனில் கேட்பதற்கு மட்டுமின்றி போன்களில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பாடல்களை கேட்கவும் உதவும். இந்த புதிய அம்சம், யூடியூப் பயனாளிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
போன்களில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள பாடல்களை கேட்கும் வசதி யூடியூப் மியூசிக் ஆப்பில் அப்டேட் 3.03-ல் வெளியாகியுள்ளது.
போனில் சேமித்த பாடல்களை யூடியூப் மியூசிக் ஆப்பில் ப்ளே செய்வது எப்பபடி:
1. ஏற்கெனவே பதிவிறக்கம் செய்த பாடல் ஓன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. 'ஓப்பன் வித்' என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அதில் யூடியூப் மியூசிக்-யை தேர்வு செய்ய வேண்டும்.
3. திரையில் யூடியூப் மியூசிக் லோகோ கொண்ட மியூசிக் ப்ளேயர் தோன்றும்.
4. முதல் முறையாக இந்த ஆப்பை பயன்படுத்தும் போது, போன் தானாகவே யூடியூப் மியூசிக்-ஐ பயன்படுத்தி (ஏற்கெனவே பதிவு செய்த பாடல்களை) ப்ளே செய்யலாமா என்ற கேள்வியை கேட்கும்.
5. இந்த ப்ளேயரை க்ளோஸ் செய்தால் கூட, பாடல் தொடர்ந்து கேட்கும்.
மேலும் இந்த வசதியைப் பெற வேண்டுமென்றால் லேட்டெஸ்ட் யூடியூப் மியூசிக் அப்டேட்டை பெறுவது கட்டாயம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்