WhatsApp அதன் பீட்டா உருவாக்கத்திற்கான புதிய அப்டேட்டைப் பெறுகிறது. இது பதிப்பு எண்ணை 2.19.366 ஆக உயர்த்துகிறது. பல்வேறு மாற்றங்களுடன், முக்கியமாக ஒரு தீவிர பிழையை இந்த அப்டேட் சரிசெய்கிறது. Android-க்கான வாட்ஸ்அப் பீட்டாவின் கடைசி பதிப்பானது பல பயனர்களுக்கு செயலிழக்க காரணமாக அமைந்தது. பதிப்பு 2.19.335-ல் காணப்படும் இந்த பிழை மற்ற குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் சமீபத்திய அப்டேட்டில் சரி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, டார்க் மோட் (dark mode) விரைவில் வாட்ஸ்அப்பிற்கு செல்லும் என்று நீண்ட காலமாக வதந்திகள் பரவின. ஆனால், இந்த புதிய அப்டேட்டிலும், இந்த அம்சம் எங்கும் காணப்படவில்லை.
வாட்ஸ்அப் பீட்டாவிற்கான புதிய அப்டேட் கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) நேரலையில் உள்ளது, மேலும் நீங்கள் ஒரு சோதனையாளராக விரும்பினால், உங்கள் சாதனத்தில் வாட்ஸ்அப்பின் சமீபத்திய பீட்டா அப்டேட்டைப் பதிவிறக்கி இன்ஸ்டால் செய்ய, இந்த இணைப்பை நோக்கிச் செல்லுங்கள்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, WhatsApp பீட்டாவிற்கான புதிய அப்டேட் பதிப்பு எண்ணை 2.19.366 ஆக உயர்த்துகிறது. வாட்ஸ்அப், பலருக்கு செயலிழக்க பயன்படும் சிக்கலை பீட்டா அப்டேட் சரிசெய்கிறது. காட்சி மாற்றங்களைப் பொறுத்தவரை, வாட்ஸ்அப் அம்சங்கள் டிராக்கர் WABetaInfo-ன் அறிக்கையில், Chat அமைப்புகளின் கீழ் முன்னர் காணப்பட்ட Wallpaper ஆப்ஷன் இப்போது தனி டிஸ்பிளே பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறது. கூடுதலாக, வாட்ஸ்அப் ஆறு வெவ்வேறு எமோஜிகளுக்கு புதிய தோல் டோன்களையும் சேர்த்தது. 'woman in manual wheelchair', ‘man in manual wheelchair', ‘woman in motorized wheelchair', ‘man in motorized wheelchair', ‘woman with probing cane', ‘man with probing cane' ஆகிய எமோஜிகள் ஆகும்.
எனவே, புதிய பதிப்பை நீங்களே சோதிக்க விரும்பினால், கூகுள் பிளே ஸ்டோருக்குச் (Google Play Store) சென்று, உங்கள் Android ஸ்மார்ட்போனில் சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டை பதிவிறக்கவும். நீங்கள் பீட்டா பதிப்பிலிருந்து விலக விரும்பினால், முதலில் பிளே ஸ்டோரில் உள்ள வாட்ஸ்அப் பீட்டா பட்டியலுக்குச் சென்று Leave the program என்பதைத் டேப் செய்யவும், பின்னர் உங்கள் போனிலிருந்து பீட்டா செயலியை அன்இன்ஸ்டால் செய்து, செயலியின் பொது பதிப்பை Play Store-ல் இருந்து இன்ஸ்டால் செய்யவும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்