லேட்டஸ்ட் வாட்ஸ் அப் அப்டேட்டுகள் என்னென்ன?

லேட்டஸ்ட் வாட்ஸ் அப் அப்டேட்டுகள் என்னென்ன?

அனைவரின் பயன்பாட்டிற்கு வரும் வாட்ஸ் அப் ஸ்டிக்கர்கள்

ஹைலைட்ஸ்
  • குரூப் சாட்டில் ஒருவருக்கு மட்டும் தனியாக பதிலளிக்கும் வசதி உள்ளது.
  • வாட்ஸ் அப் ஸ்டிக்கர்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களில் சப்போர்ட் ஆகு
  • இதில் பிஐபி மோட் உள்ளது.
விளம்பரம்

இந்த வருடம் வாட்ஸ் அப் பல அச்சுறுத்தல்களை சந்தித்து வந்தாலும், அதை ஈடுகட்டும் வகையில் பல புதிய அம்சங்களை வாட்ஸ் அப்பில் அப்டேட் செய்துள்ளது. அதில் குரூப் வீடியோ கால், ஸ்டிக்கர் சப்போர்ட் மற்றும் பண செலுத்துதல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கடந்த மூன்று மாதங்களில் வாட்ஸ் அப்பில் செய்யப்பட்டுள்ள அப்டேட்டுகளில் ஸ்டிக்கர்ஸ், பிக்சர்-இன்-பிக்சர் மோட் மற்றும் ஸ்வைப் டு ரிப்ளே, ஸைலண்ட் மோட் போன்றவை முக்கியமானதாகும்.

பீட்டா பயன்பாட்டாளர்களுக்கான முக்கிய அம்சம்

சமீபத்தில் குரூப் சாட்டில் ஒருவருக்கு மட்டும் தனியாக பதிலளிக்கலாம். அதை குரூப்பில் இருக்கும் மற்றவர்களால் காணமுடியாது இந்த வசதியை பீட்டா வெர்ஷன் 2.18.355 பயன்பாட்டாளர்களுக்கு வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது. கூகுள்பிளேயில் பீட்டா ப்ரோகிராமில் அங்கமான பின்பு வாட்ஸ் அப்பில் வலது பக்க மூலையில் வரிசையாக இருக்கும் புள்ளிகளை தொட்டதும் குரூப் சாட்டில் தனியாக பதிலளிக்க வேண்டிய நபரின் மெசேஜை தேர்வு செய்து பதிலளிக்கும் ஆப்ஷன் உள்ளது.

வாட்ஸ் அப் ஸ்டிக்கர்கள்

கடந்த மாதம், ஆப்பிள் போனில் ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியது வாட்ஸ் அப். வாட்ஸ் அப்பில் இயல்பாக கொடுக்கப்படும் ஸ்டிக்கர்களை தவிர்த்து கூகுள் பிளேயில் நமக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த ஸ்டிக்கர்கள் கிளாக்(கடிகாரம்), ஸ்டார் மற்றும் ஹார்ட் என்ற குறியீடுகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.கிளாக் பிரிவில் சமீபத்தில் பயன்படுத்திய ஸ்டிக்கர்கள் இருக்கும். ஸ்டார் குறியீடு உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களுக்கு அழைத்துச் செல்லும். ஹார்ட் குறியீட்டில் காதல், மகிழ்ச்சி, வருத்தம் மற்றும் வியத்தகு ஸ்டிக்கர்களை தேர்ந்தெடுக்கலாம்.

ஆண்ட்ராய்டு பயன்பட்டாளர்களுக்கான சைலண்ட் மோட்

வாட்ஸ் அப்பில் வரும் மெசேஜ்களுக்கு மியூட் சாட் ஆப்ஷனை தேர்வு செய்தால், மெசேஜ்கள் குறித்து வரும் அறிவிப்புகளை வாட்ஸ் அப்பில் காணமுடியாது.

ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்ஆப்

தற்போது வாட்ஸ் அப் ஜியோ போன் பயன்பாட்டாளர்களுக்கும் தங்களது சேவையை நீட்டித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது சேவையை ஜியோ போன் பயன்பாட்டாளர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் வழங்கி வருகிறது. இந்த அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம். ஆனால் பயன்பாட்டாளர்கள் நேரடியாக வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் செய்ய அனுமிதப்பதில்லை.
 

வாட்ஸ் அப் பேக்அப் மாற்றங்கள்

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது பேக்அப்புகளில் மாறுதல்களை செய்ய உள்ளது. இனி வாட்ஸ்அப் பேக்அப்புகள் கூகுள் டிரைவ் போய் சேரும். இதன் மூலம் முக்கிய தகவல்களை கூகுள் டிரைவில் சேமிக்க முடியும் இது பயன்பாட்டாளர்களுக்கு பெரிதும் உதவும். கூகுள் டிரைவில் சேமிக்க போனில் போதுமான காலி இடம் தேவை. கூகுள் டிரைவில் சேமிக்கப்படும் தகவல்கள், புகைப்படங்கள் வாட்ஸ்அப்பால் பாதுகாக்கப்படாது.

வாட்ஸ் குரூப் வீடியோ, வாய்ஸ் கால்,

வாட்ஸ் நிறுவனம் குரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் காலை சேவையை ஆண்டுராய்டு மற்றும் ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு மாத கால ஆய்வுக்கு பின் இந்த அம்சம் வாட்ஸ் அப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குரூப் காலில் 4 பேர் மட்டுமே பேச முடியும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp Stickers, Jio users
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »