உலகின் மிகவும் பிரபலமான செயலியான WhatsApp, சமீப காலமாக பல்வேறு அம்சங்களைச் சேர்த்து வருகிறது. அது அத்தனையும் ஒரே இடத்தில் உங்களுக்கான நாங்கள் தொகுத்து வழங்குகிறோம். வாட்ஸ்அப்பின் 25 டிரிக்ஸை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.
வாட்ஸ்அப்பில் உள்ள மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வீடியோ வடிவில் காணலாம்:
வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு message அனுப்பவேண்டும் என்றால், நம்பரை save செய்ய வேண்டும். இப்போது, நம்பரை save செய்யாமலும், message அனுப்பலாம். எப்படினு தெரிஞ்சுக்கோங்க!
நீங்கள் இருக்கும் இடத்திற்கு உங்கள் நண்பர்களையோ அல்லது அவர்கள் இடத்திற்கு நீங்களே செல்ல விரும்பினால், உங்கள் location-ஐ வாட்ஸ்அப் வழியாக ஷேர் செய்யலாம். இதில் லைவ் location-னும் ஷேர் செய்ய முடியும். இந்த அம்சத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.
வாட்ஸ்அப்பில் எளிய text-ஐ பயன்படுத்துவது சில நேரங்களில் சலிப்பை ஏற்படுத்தும். அதனால், நீங்கள் bold, underline, italic போன்றவற்றை பயன்படுத்தலாம். எப்படினு, பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!
வாட்ஸ்அப்பில், சில contacts-ல் இருந்து செய்திகள், அழைப்புகள் மற்றும் ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை பெறுவதைத் தடுக்கலாம். மேலும், ஒரு contact-ஐ block செய்வதன் மூலம், அவர் உங்களது last seen மற்றும் ஆன்லைன் தகவல்களைப் பார்க்க முடியாது. எப்படினு தெரிஞ்சுக்க, இதை பாருங்கள்!
நீங்கள் வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு செய்தி அனுப்பும்போது, அவர்கள் உங்கள் text-க்கு reply செய்யவில்லை அல்லது text டெலிவரி ஆகாவிட்டால், அவர்கள் உங்களை block செய்திருக்கலாம்? அதை எப்படி அறிவது என்பது இங்கே.
ஆன்லைனில் அதிக நேரம் செலவு செய்யவேண்டும், ஆனால், வாட்ஸ்அப்பில் யாரும் last seen-ஐ பார்க்கக் கூடாது என்று விரும்புகிறீர்களா? இந்த அம்சத்தை பயன்படுத்துங்கள்.
Read receipts / blue tick என்பது நீங்கள் அனுப்பும் message சென்றுவிட்டதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள உதவும். இதை யாருக்கு காட்ட விரும்பவில்லையெனில், அதை நீக்கவும் செய்யலாம். பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
automatic media download மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ போன்றவற்றை தானாக டவுன்லோடாகி, கேலரி மற்றும் மியூசிக் பிளேயரை ஸ்டோரேஜை ஆக்கிரமித்துகொள்கிறதா? அதை எப்படி நிறுத்துவது என்பதை இங்கே பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
உங்களிடம் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இருந்தால், உங்கள் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு வீடியோ காலிங் செய்து பேசலாம். எப்படினு தெரிஞ்சுக்கோங்க!
சாதாரண போன் கால் போலவே, வாட்ஸ்அப் கால்-ஐ எப்படி record செய்வது? இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க!
வாட்ஸ்அப்பில் புகைப்படங்களைப் போலவே, message-ஐயும் நீக்கிவிட்டார்களா? கவலையே வேண்டாம்! அதை எப்படி back up செய்வது என்பதை கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
வாட்ஸ்அப் message-ஐ delete செய்துவிட்டேன் என்று வருந்துகிறீர்களா? கவலை வேண்டாம், இதைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க!
வாட்ஸ்அப்பில் யாராவது ஒரு செய்தியை நீக்கினால், “This message was deleted” என்று chat-ல் காட்டுகிறது. அதை எப்படி பார்ப்பது என்பதை அறிய இதைப் பார்க்கவும்.
உங்கள் வாட்ஸ்அப் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த அம்சத்தைப் பயன்படுத்த வேண்டும். அதை எப்படி இயக்குவது என்பது இங்கே!
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டூயல்-சிம் இருந்தால், வெவ்வேறு எண்களைப் பயன்படுத்தி கால் செய்யலாம். அதேபோன்று, இரண்டு வாட்ஸ்அப் அக்கவுண்டையும் இயக்கலாம்! பார்த்து தெரிஞ்சுக்கோங்க!
வாட்ஸ்அப்பில் பதிவேற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள், ஜி.ஐ.எஃப் போன்றவை 24 மணி நேரத்திற்குப் பிறகு தானாகவே மறைந்துவிடும்.
வாட்ஸ்அப்பில், உங்கள் நண்பர்கள் பதிவிடும், புகைப்படங்களையும் வீடியோக்களையும் எப்படி டவுன்லோடு செய்வது? பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!
வாட்ஸ்அப் குரூப்ஸ் மிகவும் பிரபலமான அம்சமாகும். இதன் மூலம் நண்பர்கள், உறவினர்களுடன் குரூப்பில் ஒன்றாக chat செய்யலாம். தெரியாத நபர்கள் கூட, உங்களை வாட்ஸ்அப் குரூப்பில் சேர்க்க அனுமதிக்கிறது. இது தற்போதுவரை பெரிய சிக்கலாகவே உள்ளது. அதை எப்படி தடுப்பது?
பயோமெட்ரிக்ஸின் உதவியுடன், வாட்ஸ்அப் chats-ஐ நீங்கள் பாதுகாக்கலாம். உங்கள் வாட்ஸ்அப்பை பயோமெட்ரிக்ஸ் இல்லாமல் யாரும் திறக்க முடியாது. பயோமெட்ரிக்ஸ்-ஐ எப்படி செட் செய்வது? இதோ உங்களுக்காக!
வாட்ஸ்அப் chats-ல் are end-to-end encrypted இருந்தாலும், chat data எப்போதும் பாதுகாக்கப்படுவதோடு, வாட்ஸ்அப்பில் பகிரப்படாது. ஊடுருவும் நபர் உங்கள் வாட்ஸ்அப் செய்திகளைப் பார்த்து படிக்க முயற்சிக்கும்போது என்ன நடக்கும்? பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!
வாட்ஸ்அப்பில் உள்ள டார்க் மோட், பிரகாசமான பின்னணிக்கு மாறாக, செயலியின் theme கண் சோர்வைக் குறைக்கும். அதை எப்படி இயக்குவது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்!
chat-ல் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு சில ஸ்டிக்கர்களின் சில வாட்ஸ்அப் தானகவே வழங்குகிறது. மேலும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில், தனிப்நபர் ஸ்டிக்கர்களையும் உருவாக்கலாம் மற்றும் ஷேர் செய்யலாம். எப்படினு தெரிஞ்சுக்கோங்க!
ஒரு மென்பொருள் அப்டேட் மூலம் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு புதிய அம்சங்களை முயற்சிக்க பீட்டா சோதனையாளர்களை வாட்ஸ்அப் நம்பியுள்ளது. ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பீட்டாவை எப்படி டவுன்லோடு செய்வது?
ஐபோன் பயனர்களுக்கான சோதனைக்கு வாட்ஸ்அப் பீட்டா கிடைக்கிறது. இதை ஆண்ட்ராய்டு போல், டவுன்லோடு செய்ய முடியாது. ஐபோனில் வாட்ஸ்அப் பீட்டாவை எப்படி டவுன்லோடு செய்வது?
வாட்ஸ்அப்பில் Request Account Info அம்சம் உள்ளது. media files-ஐ தவிர, contacts, profile photos மற்றும் groups போன்ற அனைத்து தகவல்கள் மற்றும் settings-ன் விரிவான அறிக்கையை உருவாக்க அனுமதிக்கிறது.
உங்களுக்கு பிடித்த வாட்ஸ்அப் டிரிக்கை கமெண்ட்ஸ் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் பயிற்சிகளுக்கு, How to section-ஐ பார்வையிடவும்.
Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்