WhatsApp டூ Facebook… கலக்கல் அப்டேட்… இப்படியொரு விஷயம் இருக்குனு உங்களுக்குத் தெரியுமா..?

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 23 செப்டம்பர் 2019 13:20 IST
ஹைலைட்ஸ்
  • வாட்ஸ்-அப் நிறுவனமும் இது குறித்த தகவலை உறுதி செய்துள்ளது
  • இந்த அப்டேட் மூலம்,வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பிற செயலிகளில் ஷேர் செய்யமுடியும்
  • மே மாதமே இந்த அப்டேட் குறித்து தகவல் கசிந்தது

ஒரே கிளிக்கில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸை உங்களது முகநூல் பக்கத்தில் சுலபமாக பகிர்ந்துகொள்ள முடியும்.

வாட்ஸ்-அப் நிறுவனம், சமூக வலைதள மார்க்கெட்டில் தொடர்ந்து முன்னணியில் இருக்க அதிரடி அப்டேட்களை ரிலீஸ் செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது மேலும் ஒரு கலக்கல் அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டின் மூலம், வாட்ஸ்-அப்பில் போடும் ஸ்டேட்டஸை, ஃபேஸ்புக்கில் பகிர முடியும். இந்த புதிய அட்டகாச அப்டேட், சோதனையில் இருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், பயனர்களின் பயன்பாட்டுக்கு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனில் இந்த அப்டேட் இருப்பதை கேட்ஜெட்ஸ் 360 கண்டறிந்துள்ளது. சிலருக்கு மட்டும் இந்த அப்டேட் வேலை செய்யும் நிலையில், அனைத்துப் பயனர்களுக்கும் இது விரைவில் கிடைக்கும் என்று தெரிகிறது. 

இந்த புதிய அப்டேட்டின்படி, வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைக்கும் இடத்திற்குக் கீழ், ‘ஷேர் டூ ஃபேஸ்புக் ஸ்டோரி' என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒரே கிளிக்கில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸை உங்களது முகநூல் பக்கத்தில் சுலபமாக பகிர்ந்துகொள்ள முடியும். 

இது குறித்து கேட்ஜெட்ஸ் 360, வாட்ஸ்-அப் நிறுவனத்திடம் தகவல் கேட்டது. அதையடுத்து, அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், புதிய அப்டேட் வந்துள்ளதை உறுதி செய்துள்ளார். 
 

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டுக்கும் இந்த அப்டேட் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய அப்டேட் தங்களுக்கும் கிடைத்துள்ளதாக ட்விட்டர் பயனர்கள் பலர், ட்வீட்டியுள்ளனர். வாட்ஸ்-அப்பின் 2.19.258, ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும், 2.19.92 ஐபோன் வெர்ஷனிலும்  அப்டேட் கிடைக்கிறது. அதேபோல ஸ்டேபிள் ஆண்ட்ராய்டு வெர்ஷன், v2.19.244 மற்றும் கரன்ட் பேடா வெர்ஷன், v2.19.262 ஆகியவற்றிலும் இந்த அப்டேட் இருப்பதைப் பார்க்க முடிந்தது. 

ஃபேஸ்புக் ஷேரிங்கை தவிர்த்து இந்த புதிய அப்டேட்டின் மூலம் ஸ்டேட்டஸை, மற்ற செயலிகளிலும் பகிர்ந்து கொள்ளும்படி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதமே இந்த அப்டேட் குறித்து தகவல் கசிந்தது. சில வாட்ஸ்-அப் பயனர்கள் ஜூன் மாதத்தின் போது, இப்படியொரு அப்டேட் தங்களுக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில், அனைவருக்கும் அது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp for Android, WhatsApp for iPhone, WhatsApp
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ரியல்மி P4R 5G vs ஒன்பிளஸ் நார்டு CE6 லைட் 5G vs மோட்டோ G37 பவர் 5G: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  2. நெட்ஃபிக்ஸ் அப்டேட்: புதிய மொபைல் அனுபவம் மற்றும் கேமிங் திட்டங்கள் வெளியீடு!
  3. அமேஸ்ஃபிட் சீட்டா 2 ப்ரோ, சீட்டா 2 அல்ட்ரா அமேஸ்ஃபிட் பிப் மேக்ஸ் உடன் இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  4. கேன்வா அறிமுகம்: இணையம் இல்லாமலேயே டிசைன் செய்ய புதிய 'ஆஃப்லைன் மோடு' வசதி!
  5. சியோமி 17T இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: 50MP லைக்கா கேமரா, விலை மற்றும் சலுகை விபரங்கள்!
  6. கூகுள் நிகழ்நேர பன்மொழி உரையாடல்களுக்காக 'ஜெமினி 3.5 லைவ் டிரான்ஸ்லேட்' வசதியை அறிமுகப்படுத்தியது
  7. ரியல்மி P4R 5G: 8000mAh பேட்டரி, மீடியாடெக் 6300 சிப்செட்டுடன் இந்தியாவில் அறிமுகம்!
  8. லாவா போல்ட் என்2 5ஜி 6,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  9. புதிய அம்சத்தால் இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது புரொஃபைல் கிரிட்டை இனி விருப்பம்போல மறுவரிசைப்படுத்தலாம்
  10. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் பல-கணக்கு ஆதரவு (Multi-Account Support) கூடுதல் பயனர்களுக்கு வழங்கப்படுவதாகத் தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.