கல்லா கட்டுகிறது ஃபேஸ்புக்: 2019 முதல் வாட்சப் நிலைத்தகவல்களிலும் விளம்பரம்

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 4 ஆகஸ்ட் 2018 10:37 IST
ஹைலைட்ஸ்
  • தனது ஸ்டேட்டஸ் அம்சத்தின் வழியாக சம்பாதிக்க வாட்சப் திட்டம்
  • அடுத்த ஆண்டு முதல் வாட்சப் ஸ்டேட்டசின் இடையே விளம்பரங்கள்
  • 34 பைசா முதல் 6 ரூபாய் வரை கட்டணம்

தனது ஸ்டேட்டஸ் அம்சத்தின் வழியாக சம்பாதிக்க வாட்சப் திட்டம்

நமது வாழ்வின் அன்றாட தருணங்களை, செயல்பாடுகளை எளிமையான முறையில் படங்கள், சிறிய வீடியோ காட்சிகளாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வசதியாக இருந்த வாட்சப் ஸ்டேட்டஸ் விரைவில் ஃபேஸ்புக்குக்கு வருமானத்தை அள்ளித் தரும் அட்சயப் பாத்திரமாக மாற உள்ளது. ஆம், அடுத்த ஆண்டு முதல் நாம் காணும் வாட்சப் நிலைத்தகவல்களின் இடையே விளம்பரங்களும் காட்டப்படும் என்று வாட்சாப்பின் தந்தை நிறுவனமான ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிஸ் என்னும் இதுபோன்ற சேவையின் இடையே விளம்பரங்களைக் காட்டத் தொடங்கிய ஃபேஸ்புக் அதே பாணியில் வாட்சப்பிலும் விளம்பரம் செய்யப்போகிறது.

Advertisement

450 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்படும் வாட்சப் வழியாக விளம்பரம் செய்வது ஃபேஸ்புக்குக்கு இயல்பான ஒரு திட்டமாகவே இருக்கமுடியும். வாட்சப் நிலைத்தகவல்களை எத்தனைப் பேர் பார்க்கிறார்கள் எனவும் அறியமுடியும் என்பதால் இது விளம்பரதாரர்களுக்கு கூடுதல் வசதியாக அமையும்.

ஸ்னாப்சாட்டிலுள்ள ஸ்டோரிஸ் என்பதை அடிப்படையாக வைத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் வாட்சப் தனது செயலியில் நிலைத்தகவல்களை அறிமுகப்படுத்தியது. எனினும் வாட்சப்பின் பயனர் எண்ணிக்கை ஸ்னாப்சாட்டை விட பன்மடங்கு அதிகம் ஆகும். வாட்சப் விளம்பரங்களுக்கு 34 பைசா முதல் 6 ரூபாய் வரை வசூலிக்க இருக்கிறது.

ஏற்கனவே ஊபர், புக் மை ஷோ போன்ற பல நிறுவனங்களுடன் இணைந்து வாட்சப் பிசினஸ் என்னும் மாடல் கடந்த செப்டம்பரில் வியாபார நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இப்போது முப்பது இலட்சம் பேர் இணைந்துள்ளார்கள்.

Advertisement

எனினும் மொத்தத்தில் ஃபேஸ்புக்கின் வருமானம் பல்வேறு காரணங்களால் சரிவைச் சந்தித்து வருகிறது. அடுத்த சில காலங்களுக்கு இது தொடரும் என்றே அந்நிறுவனமும் கணித்துள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp Status, WhatsApp
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.