இந்தியாவில் பிரபலமான சாட்டிங் செயலியான வாட்ஸ் ஆப் இருநபருக்கிடையே நேரடியான பேமண்ட்ஸ் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்தியாவில் இந்த சேவை குறிப்பிட்ட சில வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு மட்டும் கிடைத்தாலும் விரைவில் அனைத்து 200 மில்லியன் பயனர்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்ஆப் தனிநபர் சார்ந்து பேமண்ட்களில் கவனம் செலுத்தி வந்தாலும், அதில் ஏற்கெனவே பல தொழில்களும் இன்பில்ட் பேமண்ட் அம்சங்களால் பயன்பெற்று வருகின்றனர். சீனாவில் வீசாட் பே உள்ளதை போன்று இந்தியாவில் வாட்ஸ்ஆப் பேமண்ட்ஸ் இன்றிமையாததாக மாறுமா? மாதத்திற்கு 24 மில்லியன் பரிவர்த்தனைகள் செய்யும் ரேசார் பே நிறுவனம் அதிலும் உறுதியாக இருக்கிறது.
தற்போது வாட்ஸ்ஆப் பேமண்ட்ஸ் அம்சம் உங்களுக்கு கிடைத்திருந்தால் அது உங்கள் நண்பர்களுக்கிடையே பணம் அனுப்பி, பெற்றுக்கொள்ளும் வசதி அளிக்கிறது. நீங்கள் வாட்ஸ்ஆப் மூலம் மட்டுமே தொழில் நடத்துகிறீர்கள் என்றால் இது சாதகமான அம்சம், ஆனால் நீங்கள் சரக்குகளை வேறிடத்தில் வாங்குவதற்கு அனுமதித்தால் இது சாதகமாக இருக்காது. வாட்ஸ்ஆப் பேமண்ட்ஸை தன்னுடைய தளத்தில் உள்ளடக்கிய ரேசார் பே சேர்த்துக் கொள்ளுங்கள், விரைவில் ஆண்ட்ராய்ட் செயலியில் இது சாத்தியப்பட இருக்கிறது.
ரேசார் பே தலைமை செயல் அதிகாரி ஹர்ஷில் மாதுர் கேட்ஜட்ஸ் 360-யிடம் கூறுகையில் வாட்ஸ்ஆப் பேமண்ட்ஸ் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர அதிக நேரம் எடுத்துக் கொண்டிருப்பதற்கு காரணம் அதனுடைய பெரிய பயனர் எண்ணிக்கை, மற்றும் யூபிஐ சேவையில் அது தயார் செய்யப்பட்டிருக்கிறது.
”யூபிஐயில் நல்ல விஷயம் என்னவென்றால் அது மற்ற தளங்களோடு இணைத்துப்பயன்படுத்த முடியும்” என்றார் மாதுர். “ஒரே வித்தியாசம் என்னவென்றால் அதை வாட்ஸ்ஆப் எவ்வாறு அளிக்கிறது என்பது தான். வாட்ஸ்ஆப் உங்களுக்கு விபிஏ காட்டுவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு விபிஏ தெரியாது”.
விபிஏ என்பது விர்ஷுவல் பேமண்ட் அட்ரெஸ்ஸை குறிக்கும். யூபிஐயில் பணத்தை, அனுப்பி பெறுவதற்கு தேவைப்படும் தொழில்நுட்பம். வாட்ஸ்ஆப், கூகுளின் டெஸ் போன்ற செயலிகள் மொபைல் பேமண்ட் தொடங்குவதை எளிமையாக்குகின்றன, ஆனால் ஆவர்கள் விபிஏ-வை செயலியில் ஆழமாக மறைத்து வைப்பதனால், மற்ற யூபிஏ தளங்களுடன் அதை பயன்படுத்துவதை கடினமாக்கிவிடுகிறது. இது ரேசார்ப் பே போன்ற பேமண்ட் நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கிறது.
”விபிஏ வழங்குவதில் வாட்ஸ்ஆப் ஒரு தெளிவற்ற வழியை பின்பற்றுகிறது. வாட்ஸ்ஆப்பில் இது phonenumber.ok.usb@okicic என இருக்கும். வாட்ஸாப் வாடிக்கையாளார்கள் இதை எளிதாக நினைவுபடுத்திக்கொள்ள முடியாது அதனால் நாங்கள் இண்டெண்ட் எனும் ஆண்ட்ராய்ட் அம்சத்தை பயன்படுத்தினோம்” என்றார் மாதுர்.
”வாடிக்கையாளர்கள் யூபிஐ க்ளிக் செய்தால் நாங்கள் அந்த இண்டெட் ஏபிஐ பயன்படுத்தி யூபிஐ பேமண்ட்ஸ் சப்போர்ட் செய்யும் செயலிகளின் பட்டியலை அளிப்போம்,” மேலும் “அவர் வாட்ஸ்ஆப் பே தேர்வு செய்தால் நாங்கள் இண்டெண்ட் வழியாக வாட்ஸ்ஆப்பை தொடர்பு கொண்டு டீப் லிங்கிங் மூலமாக அவர்கள் பேமண்ட் சார்ந்த தகவல்களை பார்த்துவிட்டு பின்னர் ஒரிஜினல் செயலிக்கே செல்வார்கள். இந்த பயன்பாட்டில் வாடிக்கையாளர்களுக்கு விபிஏ தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை”.
இந்தியாவில் அடுத்து பேமண்ட் புரட்சி செய்யும் தளமாக பலரும் இதை நம்புகின்றனர்.
வாட்ஸ்ஆப் பேமண்ட்ஸ் யூபிஐ முறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுமா? வாட்ஸ் ஆப்பிற்கு இந்தியாவில் 250 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருப்பதால் இந்த சேவையை அளிப்பதற்கு அதற்கு வலுவான அடித்தளம் இருக்கிறது” என்கிறார் ஐடிசி நிறுவன மூத்த ஆராய்ச்சி மேலாளர் அனுஜ் அகர்வால், “தற்போது வரை நாங்கள் 190 மில்லியனுக்கும் அதிகமான யூபிஐ பரிவர்த்தனைகள் ரூ. 270 பில்லியன் மதிப்பு வரை கவனித்திருக்கிறோம், இந்த எண்ணிக்கைகளின் படியே வாட்ஸ்ஆப் இதில் 10% ஆக்டிவ் பயனர்களைக்கூட தங்களுடைய தளத்திற்கு ஆரம்பத்தில் சில மாதங்களில் மாற்ற முடியுமென்றாலும் கூட மாதம் ஒன்றிற்கு ரூ. 27 பில்லியன் அளவிலாக தொகைக்கு 19 மில்லியன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்”.
இங்கே பெரிய கேள்வி என்னவென்றால் இந்த சேவையை எவ்வளவு வேகமாக தங்களுடைய பயனர்களை தேர்ந்தெடுக்க வைக்கப்போகிறது என்பது தான்.
”முழுமையாக தொடங்கப்பட்டுவிட்டால் வாட்ஸ்ஆப் பேமண்ட்ஸ் காட்டுத்தீ போல் பரவும் என்கிறார்” ஃபாரஸ்டர் நிறுவன ஆராய்ச்சியாளர் அர்னவ் குப்தா. ஆனால் ஆவர்கள் இதன் அனுபவம் ஒரு மெசேஜ் அனுப்புவதைப் போன்று பயனர்களுக்கு எளிமையாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்”.
வாலட், பேமண்ட்ஸ் என்பதையும் தாண்டின் ஒட்டுமொத்த கார்ட் வணிகத்தையும் பாதிக்கும் ஆற்றல் யூபிஐ-யிடம் இருக்கிறது என்கிறார் குப்தா, “உடனடி சிக்கல் எதுவும் இல்லையென்றாலும், மாஸ்டர் கார்ட்/விசா போன்ற பேமண்ட் நெட்வொர்க்குகள் யூபிஐ எளிமையாக எடுத்துக்கொள்ளக் கூடாது”.
வாட்ஸ்ஆப் பேமண்ட் எளிமையாகிற அளவிற்கு, அது தவறாக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. வாட்ஸ்ஆப்பிற்கு மிகப்பெரிய சவால் பேமண்ட் செக்யூரிட்டு தான் என்கிறார் குப்தா.
டிஜிட்டல் வாலட்டுகள் நம் நாட்டில் ஆஃபர்கள், கேஷ்பேக்குகள் மூலம் மட்டும் பிரபலமாகவில்லை, டிஜிட்டல் வாலட்டுகள் எதிர்பாராத சம்பவங்களில் ஏற்படும் இழப்புகளை குறைப்பதற்கான சாத்தியங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. இழப்பு என்பது பயனரின் வாலெட்டில் இருக்கின்ற தொகை மட்டுமே ஆகும்.
பலரும் தங்களுடைய ஒட்டுமொத்த சேமிப்புகளையும் பே.டி.எம் போன்ற செயலிகளில் வைக்கப்போவதில்லை, ஆனால் வாட்ஸ்ஆப் பேமண்ட்ஸ் யூபிஐ சார்ந்தது. இதில் உங்கள் வங்கி கணக்கு நேரடியாக இணைக்கப்பட வாய்ப்பிருப்பதாலும், இணைய குற்றச் செயல்களில் பெரிய இலக்காகக்கூடும்.
”வாட்ஸ்ஆப் யூபிஐ பேமண்ட்களில் சாத்தியமான இழப்பு ஒரு லட்சம் வரை, அதன் பெரும்பாலான பயனர்களுக்கு இதுவே அதிகமான தொகை தான்” குப்தா மேலும் கூறுகையில் “வாட்ஸ்ஆப் மோசடி தொடர்பான சிக்கல்கள் மற்றும் தவறான பரிவர்த்தனைகள் போன்ற பிரச்சனைகள் எவ்வாறு தீர்க்கப்போகிறது என்பதை கவனமாக கையாள வேண்டும்” இது பற்றிய முறையான விழிப்புணர்வு அவசியம்.
அதே சமயத்தில் வாட்ஸ்ஆப் பேமண்ட்ஸ், யூபிஐ ,க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டின் பயன்பாட்டையும் கூட அச்சுறுத்தலாம். அகர்வால் கூறுகையில் “தற்சமயத்தில் விசா, மாஸ்டர் கார்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் ரூபே கார்ட் பயன்பாட்டின் மீது அதிக கவனம் செலுத்துகின்றன” அவர்களுக்கு யூபிஐ சேவையைப் பற்றி கவனிப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது.
தற்போது யூபிஐ நபர் சார்ந்து தான் இயங்குகிறது, உங்களுடைய வனிகத்திற்கு யூபிஐ வழியாக பேமண்ட் செலுத்த வேண்டும் என்றால், வாடிக்கையாளர் பேமண்ட்ஸ் பேஜில் யூபிஏ தேர்வு செய்து, பின்னர் யூபிஏ செயலியில் பேமண்ட் நோட்டிஃபிகேஷன் பெறுவர், அதில் யூபிஏ பின் அழுத்தி பேமண்ட் உறுதி செய்துவிட்டு பின்னர் ஸ்டோர் பேஜிற்கு சென்று ஆர்டரை உறுதி செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.
ரேசர்பே முறையில், வாடிக்கையாளர் யூபிஏ செயலியை பேமண்ட்ஸ் பேஜை தேர்வு செய்தாலே பேமண்ட் தகவலுடன் செயலி வரும் அதில் பின் நம்பர் செலுத்தினாலே ஆர்டர் உறுதி ஆகிவிடும். இது முந்தைய முறையை விடவும் எளிமையானது, வேகமானது.
ரேசர் பே முறை அனைத்து தளங்களிலும் வேலை செய்யாது. நீங்கள் ஒரு ஐபோன் அல்லது ஐபேட் பயன்படுத்தினால், யூபிஏ பேமண்ட்ஸ் சற்று சிக்கலானது, ஏனென்றால் ஆப்பிளில் இண்டெண்ட் போன்ற ஏபிஐ வேலை செய்வதில்லை. சிஈஓ மாதுர் கூறிகையில். இது ரேசர் பே நிறுவனத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது, ஏனென்றால் இந்தியாவில் பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்கள் ஆண்ட்ராய்ட் தான் பயன்படுத்துகின்றனர்.
ரேசார் பே நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களின் தேர்வுகளில் 14 % வாட்ஸ்ஆப் பேமண்டில் தான் உள்ளது, ” என்கிறது பீட்டா வெர்ஷனில் இருக்கின்ற போதே இதன் பயன்பாடு கனிசமாக இருக்கிறதென்றால் சராசரி பயன்பாட்டிற்கு வந்த பிறகு இதன் பயன்பாடு அதிகரிக்கும்” என்கிறார் மாதுர். மேலும் கூறுகையில் ரேசார் பே தளத்தில் 7% முதல் 8% வரையிலான பேமண்ட்கள் யூபிஏ வழியாக தான் நடைபெறுகின்றன. பிம், டெஸ் மற்றும் ஃபோன்பே போன்றவை பிரபலமான யூபிஐ செயலிகள் ஆகும். எனினும் வாட்ஸ்ஆப் அனைவருக்கும் பேமண்ட் சேவையை அளித்தபிறகு அனைத்து யூபிஏ செயலிகளையும் முந்திவிடும்.
ஐடீசி அகர்வால் கூறுகையில் , “ஒட்டுமொத்த யூபிஐ சார்ந்த பரிவர்த்தனைகளில் பிம் செயலியின் பங்களிப்பு 2016 - 17 ஆண்டில் 35% என்பதில் இருந்து 2017 - 18 ஆண்டில் 10% குறைந்திருக்கிறது,”. “இது பிம் செயலி மற்ற யூபிஐ சார்ந்த தளங்களின் வேகத்திற்கு இணையாக அதன் பயன்பாட்டை வளர்க்க முடியவில்லை” என்பதை காட்டுகிறது என்றார்.
மேலும் “பிம் எந்த விதமான புதுமைகளையும் செய்யவில்லை, ஆனால் வாட்ஸ்ஆப், செயலிக்குள்ளாகவே வாங்குபவர் மற்றும் விற்பவருக்கான பர்வர்த்தனைக்கான ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறது” என்றார்.
ஐஆர்சிடிசி போன்ற சேவைகள் வாட்ஸ்ஆப் பேமண்ட் சேவையை அளித்தாலும், இது பொது பயன்பாட்டிற்கு வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். ஃபாரஸ்டர் குப்தா வாட்ஸ்ஆப்பை பே.டி.எம் உடன் ஒப்பிடுகிறார்.
”பே.டி.எம் நிறுவனத்தின் பெரும் நகரங்களை தாண்டிய சேவைப் பரப்பை சற்று யோசித்துப் பாருங்கள்,” தற்போது அனைத்து நகரங்களிலும் பேடிஎம்மின் சேவை வளர்ந்திருக்கிறது, இது இரண்டு விஷயங்கள் இல்லாமல் சாத்தியமாகியிருக்கிறது. ஒன்று பணமதிப்பிழப்பு மற்றொன்ரு கேஷ்பேக்குகள், தள்ளுபடிகள், ஆஃப்பர்கள் ஆகும்.
“தற்போது வாட்ஸ்ஆப்பிற்கு அதுபோன்ற ஒரு சூழல் கிடையாது, என்றாலும் அதன் புகழையும், பரப்பையும் குறைந்து மதிப்பிடக்கூடாது, வாட்ஸ்ஆப் வளர்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன” என்றார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்