வாட்ஸ்ஆப்: ஒரே கணக்கு இரண்டு சாதனங்களில், விரைவில் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்!

வாட்ஸ்ஆப்: ஒரே கணக்கு இரண்டு சாதனங்களில், விரைவில் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்!

வாட்ஸ்ஆப் ஐஓஎஸ் பயனர்களுக்காக இந்த புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹைலைட்ஸ்
  • ஐஓஎஸ் புதுப்பிப்புக்கான வாட்ஸ்அப் வெர்ஷன் 2.19.80.16 அறிமுகம்
  • குயிக் மீடியா எடிட் அம்சத்தை சோதனையில் வைத்துள்ளது
  • இந்த அம்சங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்
விளம்பரம்

ஐஓஎஸ் பயனர்களுக்காக வாட்ஸ்அப் ஒரு புதிய பீட்டா புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. அந்த புதிய வெர்ஷன் நிறைய மாற்றங்களைக் கொண்டுள்ளது. 3D டச் பயன்படுத்தி சுயவிவரப் படத்தைச் சேமிக்கும் திறனை நீக்குதல், அரட்டைகளில் பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களுக்கான நோட்டிபிகேஷன் மற்றும் குயிக் மீடியா எடிட் (Quick Media Edit) அம்சம் ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கவை. இப்போது பீட்டா வெர்ஷனில் அறிமுகமாகியுள்ள இந்த அம்சங்களை, விரைவில் வாட்ஸ்ஆப் அப்டேட்டில் எதிர்பார்க்கலாம். வாட்ஸ்ஆப் அம்சங்களை பிந்தொடரும் WABetaInfo நிறுவனமோ ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி, ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் ஒரே கணக்கை இயக்கும் வசதியை வாட்ஸ்ஆப் கொண்டு வரவுள்ளது. 

வாட்ஸ்ஆப், டெஸ்ட்ஃப்லைட் பீட்டா சோதனையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐஓஎஸ் புதுப்பிப்புக்கான வாட்ஸ்அப் வெர்ஷன் 2.19.80.16-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மாற்றங்களைப் பற்றி பேசுகையில், வாட்ஸ்அப் 3D டச் புகைப்படத்தை சேமிக்கும் திறனை நீக்குதல் அம்சத்தை இந்த புதிய வெர்ஷன் கொண்டுள்ளதாக  WABetaInfo-வின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அரட்டைகளில் பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்யவும், அது குறித்த நோட்டிபிகேஷன்களை அளிக்கும் வசதிகளை இந்த புதிய வெர்ஷனில் வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.
 

whatsapp beta main whatsapp

மேலும், ஐஓஎஸ் மற்றும் அண்ட்ராய்ட் என இரண்டிலும் எதிர்பார்க்கப்படும் புதிய அம்சம் குயிக் மீடியா எடிட் (Quick Media Edit) அம்சம். இந்த வசதி தற்போது ஐஓஎஸ் பீட்டாவிற்கான சமீபத்திய சோதனையில் இடம்பெற்றுள்ளது. இந்த வசதி ஒரு தனிநபர் அரட்டையில் அல்லது குரூப் அரட்டையில் அனுப்பப்பட்ட புகைப்படங்களை எடிட் செய்துகொள்ள உதவும்.

அதுமட்டுமின்றி, பயனர்கள் ஒரே கணக்கை ஒரே நேரத்தில் பல சாதனங்களில் பயன்படுத்த அனுமதிக்கும் புதிய வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஐபாட், ஐபோன் என இரண்டு சாதனங்களிலும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். இதேபோல், அதே வாட்ஸ்அப் கணக்கை ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் என இரு சாதனங்களிலும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp for iOS, WhatsApp Multi Platform System
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »