Photo Credit: Wabetainfo
வாட்ஸ்அப் என்பது உலகின் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலியாகும். கடந்த சில ஆண்டுகளில் வழக்கமான புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும், அமெரிக்க நிறுவனம் இந்த செய்தியிடல் செயலியில் புதிய அம்சங்களைச் சேர்க்கிறது. இப்போது பல சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்தலாம். புதிய அம்சத்துடன் அந்த சாதனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது.
உங்கள் ஸ்மார்ட்போனில் உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, வாட்ஸ்அப் உள்நுழைந்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதே எண்ணைக் கொண்ட மற்றொரு தொலைபேசியில் உள்நுழைவதற்கு முன் முதல் தொலைபேசியிலிருந்து வெளியேறுவது கட்டாயமாகும். இருப்பினும், புதிய அம்சம், ஒரே நேரத்தில் பல ஸ்மார்ட்போன்களிலிருந்து ஒரே கணக்கில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த அனுமதிக்கும்.
WABetaInfo இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. மெசேஜிங் நிறுவனம் 2019 முதல் இந்த அம்சத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் புதிய அம்சம் மீண்டும் காணப்பட்டது. மற்றொரு சாதனத்திலிருந்து அதே கணக்கில் உள்நுழையும் ஆப்ஷனை சேர்த்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்