வாட்ஸ்அப் நிறுவனம் (WhatsApp), புதிய அட்டகாச அப்டேட்களை (Updates) வெளியிட்டுள்ளது. 2.19.110 என்ற எண் கொண்ட இந்த புதிய வெர்ஷனில் இரண்டு முக்கிய அப்டேட்கள் வந்துள்ளன. அதன்படி Muted Chats மற்றும் வாட்ஸ்அப் குழுக்களுக்கான பிரைவசி செட்டிங்ஸில் (WhatsApp Group Privacy Settings) மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த அப்டேட்டின்படி, ம்யூட் செய்யப்பட்ட சாட்ஸ்களில் இருந்து எந்தவித நோட்டிஃபிகேஷனும் வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ம்யூட் செய்த சாட்டில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தால், அது நோட்டிஃபிகேஷனாக காட்டப்படாது.
மேலும் இந்த புதிய அப்டேட்டின் மூலம் ஸ்டிக்கர்ஸ், இமோஜிக்கள் மற்றும் மீடியாவில் இருப்பனவற்றை வேண்டிய இடத்தில் வைக்க முடியும் என்று கூறப்படுகிறது. புதுவித ஸ்பலாஷ் ஸ்க்ரீனும் பொருத்தப்பட்டுள்ளது.
இதைத் தவிர்த்து, வாட்ஸ்அப் குழு பிரைவசி அமைப்புகளிலும் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னர் வாட்ஸ்அப் குழுக்களில், Who Can Add Me to Groups என்ற ஆப்ஷனுக்குக் கீழ் Nobody என்பது மட்டும்தான் இருக்கும். தற்போது, My Contacts Except என்கிற இன்னொரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அப்டேட் மூலம், எந்த நபர் உங்களை இன்னொரு குழுவுக்கு அழைக்க கூடாது என்பதை தேர்வு செய்ய முடியும். யாருமே, உங்களை ஒரு புதிய வாட்ஸ்அப் குழுவுக்கு அழைக்கக் கூடாது என்று நினைத்தால், “Nobdy” என்பதை தேர்வு செய்யலாம். அதே நேரத்தில், My Contacts Except என்பதை தேர்வு செய்தால், யாரெல்லாம் இன்னொரு குழுவுக்குள் உங்களை சேர்க்கக் கூடாது என்பதை முடிவு செய்யலாம்.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த அப்டேட்கள் தற்போது, ஐபோன்களுக்கு மட்டுமே விடப்பட்டிருந்தாலும், விரைவில் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்