ஐபோன் பயனர்களுக்கு 'டார்க் மோட்' வந்தாச்சு! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 22 பிப்ரவரி 2020 10:45 IST
ஹைலைட்ஸ்
  • வாட்ஸ்அப் v2.20.30.25 பீட்டா அப்டேட் வெளியிடப்பட்டது
  • டார்க் தீம் தவிர, இது context menu-வை மீண்டும் கொண்டுவருகிறது
  • சமீபத்திய பீட்டா அப்டேட் வால்பேப்பர் blur அம்சத்தையும் சேர்க்கிறது

பீட்டா சோதனைக்கான ஆப்பிள் நிறுவனத்தின் டெஸ்ட் ஃப்ளைட் இடங்கள் தற்போது நிரம்பியுள்ளன.

Photo Credit: WABetaInfo

வாட்ஸ்அப் தனது ஐபோன் வாடிக்கையாளர்களுக்காக புதிய பீட்டா அப்டேட்டைப் பெற்றுள்ளது, இது டார்க் மோட் அம்சத்தை பயனர்களுக்குப் பரவலாகக் கிடைக்கச் செய்கிறது. முந்தைய வாட்ஸ்அப் பீட்டா அப்டேட், இந்த அம்சத்தை சில பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது. டார்க் மோடின் கிடைக்கும் தன்மையை விரிவாக்குவதோடு, புதிய பீட்டா அப்டேட், chat wallpapers, background blur effect, advanced search mode ஆகியவற்றிற்கான வண்ணங்களையும் சேர்க்கிறது. மேலும், context mode-ஐ ஹேப்டிக் டச் ஆதரவுடன் மீண்டும் கொண்டு வருகிறது. இந்த மாற்றங்களில் சில ஏற்கனவே ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பின் பீட்டா உருவாக்கத்திற்கு வழிவகுத்தன.

ஆப்பிளின் டெஸ்ட் ஃப்ளைட் பீட்டா சோதனைத் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள பயனர்களுக்கு, வாட்ஸ்அப் v2.20.30.25 பீட்டா அப்டேட் வெளியிடப்பட்டுள்ளதாக WABetaInfo தெரிவித்துள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த அப்டேட் ஐபோனுக்கான டார்க் மோடை வாட்ஸ்அப்பில் கொண்டு வந்து, இறுதியாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வாட்ஸ்அப் லோகோவுடன் டார்க் ஸ்பிளாஸ் திரையைச் சேர்க்கிறது. டார்க் ஓவர்லே பெறும் UI கூறுகளில் Chat lists, bubbles மற்றும் வால்பேப்பர்கள் உள்ளன. மேலும், chat வால்பேப்பர்களுக்கான வண்ணங்களும் வந்துவிட்டன, மேலும் ஷேர் பிரிவு ஒரு டார்க் UI மாற்றியமைப்பையும் பெறுகிறது.

ஐபோன் பயனர்களுக்கு, போனின் Settings செயலியிலிருந்து கான்ட்ராஸ்ட் அதிகரிக்கும் அம்சத்தை இயக்குவதன் மூலம் அவர்கள் டார்க் தீம் வடிவமைப்பைப் பிரதிபலிக்க முடியும். டார்க் மோடைத் தவிர, பயனர்கள் delete அல்லது forward செய்யப் பல செய்திகளைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​சமீபத்திய WhatsApp அப்டேட்டும் தற்போதைய வால்பேப்பரையும் blur செய்கிறது.

ஐபோன்களுக்கான வாட்ஸ்அப் v2.20.30.25 அப்டேட்டுடன் வரும் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், Advanced Search Mode ஆகும். இது சில காலமாக வளர்ச்சியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. Advanced Search Mode, குறிப்பிட்ட செய்தி வகைகளைத் தேடவும், போனில் சேமிக்கப்பட்ட மீடியாவைப் பார்க்கவும் பயனர்களை அனுமதிக்கிறது. வாட்ஸ்அப்பில் Advanced Search Mode-ஐப் பயன்படுத்தும் போது பயனர்கள் Grid மற்றும் Captions பார்வைக்கு இடையே தேர்வு செய்யலாம். 

பீட்டா சோதனைக்கான ஆப்பிள் நிறுவனத்தின் டெஸ்ட் ஃப்ளைட் இடங்கள் தற்போது நிரம்பியுள்ளன. மேலும், கூடுதல் உறுப்பினர்கள் எப்போது ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்பதில் எந்த வார்த்தையும் இல்லை.


Can Samsung Galaxy S10 Lite, Note 10 Lite dethrone OnePlus 7T? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

                                              

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp for iPhone, Dark Mode, WhatsApp Dark Mode
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  2. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
  3. Motorola G86 Power 5G: ஒருமுறை சார்ஜ் போட்டா மூணு நாள் வரும்! அம்சங்கள் கேட்டா அசந்து போவீங்க!
  4. கேமர்களுக்கு ஒரு குட் நியூஸ்! Acer Nitro Lite 16 லேப்டாப் வந்தாச்சு! விலை கேட்டா ஷாக் ஆவீங்க!
  5. இந்த போன் சார்ஜ் போட்டா போதும்... மூணு நாள் வரும்! Oppo Find X9 Pro-வின் மிரட்டல் அம்சங்கள்!
  6. ஐபோன் 17 வாங்க காத்திருப்போர்க்கு சூப்பர் நியூஸ்! புதிய கலர்களில் ஜொலிக்கப் போகுது
  7. Vivo Y31 5G: இந்தியால கெத்து காட்ட வருதா? என்னலாம் எதிர்பார்க்கலாம்?
  8. அறிமுகமாகிறது Primebook 2 Neo: 8GB RAM, Full HD டிஸ்ப்ளே - வாங்கலாமா?
  9. சாம்சங் போன்களில் பூட்லோடர் லாக்? One UI 8-ல் புதிய சிக்கல் - உங்கள் போன் பாதிக்கப்படுமா?
  10. Oppo Reno 14FS 5G: ₹45,700 விலையில் அறிமுகமா? அசத்தல் டிசைன், Snapdragon 6 Gen 4 SoC உடன் கசிந்த தகவல்கள்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.