இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்...! வாட்ஸ்அப்பில் 'டார்க் மோட்' வந்தாச்சு! 

இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள்...! வாட்ஸ்அப்பில் 'டார்க் மோட்' வந்தாச்சு! 

வாட்ஸ்அப்பின் டார்க் மோட், UI-க்கு டார்க் பச்சை வண்ணத்தை வழங்குகிறது

ஹைலைட்ஸ்
  • வாட்ஸ்அப்பின் டார்க் தீம் v2.20.13 அப்டேட்டுடன் வருகிறது
  • அப்டேட் இப்போது Google play வழியாக பீட்டா பயனர்களுக்கு வெளிவருகிறது
  • பயனர்கள் இருண்ட & லைட் மோடில் தானாக மாறவும் தேர்வு செய்யலாம்
விளம்பரம்

வாட்ஸ்அப் இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட dark mode அம்சத்தைப் பெற்றுள்ளது. ஆமாம், வாட்ஸ்அப்பில் பெரிதும் கசிந்த dark mode, அதன் தடயங்கள் செயலியின் interface மற்றும் குறியீட்டில் சில மாதங்களுக்கு முன்பு தோன்றத் தொடங்கின. இப்போது இறுதியாக அதன் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. வாட்ஸ்அப்பின் சொந்த dark mode, theme selection interface-ல் Dark என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது மெசேஜிங் செயலியில் முழு UI-க்கு இங்கேயும் அங்கேயும் சில மாறுபட்ட வண்ணங்களுடன் dark green profile-ஐ அளிக்கிறது. home screen மற்றும் settings menu இப்போது டார்க் நிறத்தில் இருக்கின்றன. ஆனால் conversation interface-ஐப் பொறுத்தவரை, chat bubbles மட்டுமே இருட்டாக இருக்கும்போது பின்னணி வெள்ளையாக இருக்கும் அல்லது பயனர்கள் பின்னணியாக அமைத்துள்ள வேறு எந்த வண்ண பயனர்களையும் இது பிரதிபலிக்கிறது.

முக்கியமானவை: ஆனால், இந்த அம்சம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி நாம் செல்வதற்கு முன்பு, dark mode தற்போது பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நிலையான சேனல் வழியாக அம்சம் எப்போது வெளியிடப்படும் என்பதற்கு எந்த வார்த்தையும் இல்லை.

வாட்ஸ்அப்பில் உள்ள டார்க் பயன்முறை ஏற்கனவே Google play வழியாக பீட்டா சோதனையாளர்களுக்காக வரத் தொடங்கியுள்ளது. மேலும், இது புதிய v2.20.13 அப்டேட்டுடன் வருகிறது. நீங்கள் பீட்டா சோதனையாளராக இருந்து, இன்னும் அப்டேட்டை பெறவில்லை என்றால், நீங்கள் APKMirror-ல் இருந்து WhatsApp பீட்டா v2.20.13 APK-ஐ பதிவிறக்கம் செய்யலாம். அப்டெட்டை இன்ஸ்டால் செய்த பின், பயனர்கள் முதலில் வாட்ஸ்அப் டார்க் மோடை பார்க்கவில்லை எனில், Google Play Store-ல் இருந்து அல்லது மேலே கொடுக்கப்பட்ட இணைப்பிலிருந்து செயலியின் சமீபத்திய உருவாக்கத்தை நீக்கி ரீ-இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று WABetaInfo கூறுகிறது. நிச்சயமாக, உங்கள் chat history-ஐ back up எடுத்த பின்னரே செயலியை நீக்கவும்.

நீங்கள் பீட்டா சோதனையாளராக இல்லாவிட்டால், செயலியின் புதிய டார்ட் பயன்முறையை முயற்சிக்கக் காத்திருக்க முடியாவிட்டால், Google play வழியாக பீட்டா சோதனையாளராக நீங்கள் எவ்வாறு பதிவு செய்யலாம் மற்றும் வாட்ஸ்அப் பீட்டா பில்ட்களைப் பதிவிறக்கலாம்.
whatsapp ndtv body WhatsApp

வாட்ஸ்அப்பின் புதிய டார்ட் தீம், செயலியின் interface-க்கு dark green profile-ஐ வழங்குகிறது

வாட்ஸ்அப்பில் Dark Mode-ஐ எப்படி இயக்குவது?

வாட்ஸ்அப்பில் dark mode அல்ல்து dark theme இயக்குவது மிகவும் எளிது. புதிய தோற்றத்தை விரைவாக செயல்படுத்த கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும். OLED திரை போன்களில் பேட்டரியைச் சேமிக்க இது உதவும்.

  1. சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டை பதிவிறக்கி செயலியைத் திறக்கவும்.
  2. செயலியைத் திறந்ததும், திரையின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று-புள்ளி மெனு ஐகானை tap செய்து, மெனுவிலிருந்து “Settings” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. நீங்கள் Settings பக்கத்தில் வந்ததும், “Chats” என்பதைத் tap செய்யவும், பின்னர் “Theme”-ஐ tap செய்யவும். அவ்வாறு செய்வது நீங்கள் theme-ஐத் தேர்ந்தெடுக்கும் சாளரத்தைத் திறக்கும்.
  4. தோன்றும் சாளரத்தில் “Dark” என்பதைத் tap செய்யவும். இது செயலி முழுவதும் dark mode interface-ஐ இயக்கும்.
  5. system settings-ன் அடிப்படையில் டார்க் மற்றும் லைட் மோடில் தானாக மாற “System default” ஆப்ஷனை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp Dark Mode, WhatsApp Dark Theme
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »