Search, டவுன்லோடுகளில் புது அப்டேட்ஸ் - WhatsApp பயனர்களே தெரிஞ்சுக்கோங்க!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 8 ஏப்ரல் 2020 12:46 IST
ஹைலைட்ஸ்
  • Advanced Search feature இன்னும் வளர்ச்சியில் உள்ளது
  • frequently-forward media-வை தானாக பதிவிறக்கம் செய்ய அனுமதிக்காது
  • வாட்ஸ்அப், சமீபத்திய பீட்டாவில் ஒரு முக்கியமான பிழையையும் சரி செய்தது

ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் v2.20.117 பீட்டா, சோதனையாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது

Photo Credit: WABetaInfo

சமூக வலைத்தள செயலிகளில் முன்னனி வகிப்பது வாட்ஸ்அப். இந்தியாவில் மட்டும் சுமார் 400 மில்லியன் பயனர்கள் இதை பயன்படுத்துகின்றனர். ஆண்டு தொடக்கத்தில் இருந்தே வாட்ஸ்அப் பல அப்டேட்டுகளை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்டுக்கான புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பு பல மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. 

Android-க்கான WhatsApp v2.20.117 பீட்டா அப்டேட்டை WABetaInfo வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட், செயலி செயலிழக்க செய்த முக்கியமான பிழையை சரிசெய்கிறது. libcurve25519.so என்ற நூலகம் காணாமல் போனதால் வாட்ஸ்அப் செயலிழந்தது என்று WABetaInfo குறிப்பிடுகிறது. 


புதிய அப்டேட்டின் விவரங்கள்: 

1. Advanced Search

பயனர்கள் எந்த வகையான media-வையும் எளிதாகக் கண்டறிய அனுமதிக்கும். அம்சத்தைப் பயன்படுத்தி பயனர்கள் புகைப்படங்கள், ஆடியோ, ஜிஃப்கள், வீடியோ மற்றும் ஆவணங்களைத் குறிப்பாகத் தேட முடியும். இந்த அம்சம் இன்னும் வளர்ச்சியில் உள்ளதோடு, அதை சமீபத்திய பீட்டா பதிப்பிலும் காண முடியாது. இந்த அம்சம் கடந்த ஆண்டு ஐபோனுக்கான வாட்ஸ்அப் v2.20.30.25 பீட்டாவில் காணப்பட்டது. இப்போது ஆண்ட்ராய்டிலும் சோதிக்கப்பட்டு வருகிறது.

ஆண்ட்ராய்டில் Protect Backup அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்படுகிறது

2. Protect Backup 

இந்த அம்சமும் வளர்ச்சியில் உள்ளது. முன்னதாக, இந்த அம்சம் ஆண்ட்ராய்டுக்கான WhatsApp v2.20.66 பீட்டாவில் காணப்பட்டது. இது உங்கள் Google Drive backup-ஐ பாஸ்வேட் மூலம் பாதுகாக்க உதவுகிறது. WABetaInfo குறிப்பிடுகையில், ‘பாஸ்வேட் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் சர்வரில் சேமிக்கப்படவில்லை. ஒருவேலை, பாஸ்வேடை இழந்தால், நீங்கள் chat history-ஐ backup-ல் மீட்டெடுக்க முடியாது. இந்த அம்சம் சமீபத்திய பீட்டாவில் இருந்தாலும் அதைப் பார்க்க முடியாது, ஏனெனில் இது இன்னும் இயக்கப்படவில்லை.


3. Auto-Download Rule 

இது எதிர்கால அப்டேட்டுகளில் ஒன்றாகும். புதிய ஆணையின்படி, frequently forwarded படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் குரல் செய்திகளை தானாகவே பதிவிறக்கம் செய்வதை தடைசெய்யும் புதிய தானியங்கு பதிவிறக்க விதிகளை வாட்ஸ்அப் செயல்படுத்தவுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Vivo ரசிகர்களே! X300 சீரிஸ் இந்தியாவில் வருது! Zeiss கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் டிசம்பரில் லான்ச்
  2. அடேங்கப்பா! Redmi K90 Pro Max-ல Bose ஆடியோவா? சும்மா தெறிக்குமே! | விலை & ஸ்பெக்ஸ்
  3. 108MP கேமரா, 7500mAh பேட்டரி: பட்ஜெட்ல ஒரு மாஸ் போன்! - Honor Magic 8 Lite லீக்ஸ்
  4. 2.07" AMOLED ஸ்கிரீன், 24 நாள் பேட்டரியா? - Redmi Watch 6 போட்டிருக்கும் மாஸ் பிளான்
  5. ஃபோன் ஸ்டோரேஜ் ஃபுல்லா இருக்கா? இனிமேல் WhatsApp-ல் இருந்தே ஈஸியா க்ளீன் பண்ணலாம்!
  6. WhatsApp Group-களில் இப்போ @all யூஸ் பண்ணலாம்! முக்கியமான அறிவிப்புகள் இனி எல்லாருக்கும் உடனே போகும்!
  7. JioSaavn-ல் விளம்பரம் இல்லாம பாட்டு கேட்க ஆசையா? ரூ.399-க்கே 1 வருடம் சப்ஸ்கிரிப்ஷன்
  8. iQOO 15-ன் பர்ஃபார்மன்ஸை இனி இந்தியாவிலும் பார்க்கலாம்! Snapdragon 8 Elite Gen 5, OriginOS 6 உடன் நவம்பரில் வருகிறது!
  9. OnePlus-ன் கேமிங் ராட்சசன்! Ace 6-ல் இதுதான் டாப்: Snapdragon 8 Elite, 165Hz ஸ்கிரீன், ரெக்கார்டு பிரேக் பேட்டரி
  10. மார்க்கெட்டையே அதிரவைக்க iQOO ரெடி! Neo 11-ல் இத்தனை அம்சங்களா? 2K டிஸ்ப்ளே, Snapdragon சிப், 100W சார்ஜிங்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.