ரீசார்ஜ் செய்தால் கேஷ்பேக்! - வோடபோனின் அசத்தல் திட்டம்!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 10 ஏப்ரல் 2020 12:02 IST
ஹைலைட்ஸ்
  • அதிகாரப்பூர்வ செயலியின் மூலம் செய்யப்படும் ரீசார்ஜுக்கு மட்டுமே கேஷ்பேக்
  • ஏர்டெல், ஜியோ இதே போன்ற திட்டங்களை சந்தாதாரர்களுக்கு வழங்குகின்றன
  • இந்த கேஷ்பேக் திட்டத்திற்காக ஜியோ ஒரு தனி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது

வோடபோன், ஏப்ரல் 30 வரை பயனர்களை கேஷ்பேக் சம்பாதிக்க அனுமதிக்கும்

ஏர்டெல் மற்றும் ஜியோவை அடுத்து, வோடபோன் ஐடியாவும் ஒரு புதிய #RechargeforGood திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலம், சந்தாதாரருக்கு, பிற ப்ரீபெய்ட் கணக்குகளை ரீசார்ஜ் செய்வதற்கான கமிஷனைப் பெற உதவுகிறது. சந்தாதாரர்கள் MyVodafone மற்றும் MyIdea செயலிகளை பயன்படுத்தி மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் வோடபோன் 6 சதவீதம் கேஷ்பேக்கை வழங்குகிறது. வேறு எந்த தளத்தில் இருந்து ரீசார்ஜ் செய்தாலும் கேஷ்பேக் பெற முடியாது. 

Vodafone சந்தாதாரர்கள் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை அல்லது இந்த பணத்தை திரும்பப் பெற மற்றொரு செயலியை இன்ஸ்டால் செய்யவும் வேண்டியதில்லை. அவர்கள் ரீசார்ஜ் செய்தால் போதும். கேஷ்பேக் தொகை 96 மணி நேரத்திற்குள் பயனர் கணக்கில் கிரெடிட் செய்யப்படும்.


கேஷ்பேக் விவரங்கள்:

வோடபோன், பிரபலமான ரூ.149 ரீசார்ஜுக்கு ரூ.10 கேஷ்பேக்கையும், ரூ.249 ரீசார்ஜுக்கு ரூ.20 கேஷ்பேக்கையும் வழங்குகிறது. ரீசார்ஜ் மதிப்பின் அடிப்படையில் கேஷ்பேக் மாறுபடும். வோடபோன் 6 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்குகிறது. இந்த கேஷ்பேக், Jio மற்றும் Airtel-ன் இதே போன்ற திட்டங்களில் 4.16 சதவிகித கமிஷனை விடவும், 4 சதவிகித கேஷ்பேக்கை விடவும் 2 சதவீதம் அதிகமாகும். வோடபோன், ஏப்ரல் 30 வரை பயனர்களை கேஷ்பேக் சம்பாதிக்க அனுமதிக்கும். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vodafone, Idea, Airtel, Jio, MyVodafone ap, Vodafone Recharge for Good
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.