கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறக்கபிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரமால் தடுக்கும் வகையிலும், COVID-19 வைரஸை கட்டுபடுத்தும் முயற்சியிலும் உபெர் களமிறங்கியுள்ளது. ஆம், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க, உபெர் சமீபத்தில் பிக் பேஸ்கெட் உடன் இணைந்து.
Uber, தற்போது Flipkart உடன் இணைந்து, அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யவுள்ளது. இந்த சேவை, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருக்கு மட்டுமே இப்போது கிடைக்கிறது. இதில், உபெரின் கார்கள் மற்றும் பைக்குகள் பயன்படுத்த உள்ளன. இந்த சேவை, விரைவில் மற்ற நகரங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
அரசு நிர்ணயித்த வழிகாட்டுதல்களின்படி, சேவையுடன் தொடர்புடைய அனைத்து ஓட்டுநர்களும் மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் சுகாதார தரத்தை பராமரிக்கும் என்று உபெர் வலைப்பதிவு தெரிவித்துள்ளது. மேலும், இந்த சேவைக்கு எந்த கமிஷனையும் வசூலிக்க மாட்டேன் என்றும், டெலிவரிகள் மூலம் சம்பாதித்த பணம் அனைத்தும் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் என்றும் உபெர் கூறியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்