இனி PhonePe-விலும் சேட்டிங் செய்யலாம்...! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 3 பிப்ரவரி 2020 16:02 IST
ஹைலைட்ஸ்
  • செயலியில் புதிய chat அம்சத்தை ஃபோன்பே அறிமுகப்படுத்தியுள்ளது
  • பயனர்கள் இப்போது பணத்தை அனுப்பலாம் / பணம் பெற்றதை உறுதிப்படுத்தலாம்
  • இந்த அம்சம் 185 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

PhonePe-வில் chat அம்சம், ஒரு வாரத்திற்கு முன்பு Android மற்றும் iOS சாதனங்களுக்காக தொடங்கப்பட்டது

பயனர்களுக்கு தளத்தில் உரையாடலை எளிதாக்கும் முயற்சியில், செயலியில் புதிய chat அம்சத்தை டிஜிட்டல் பேமெண்ட் ப்ளேயர் ஃபோன்பே அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் இப்போது வேறு எந்த செய்தியிடல் செயலியின் தேவையும் இன்றி, பணம் அனுப்புவது அல்லது பணம் பெறுவதை உறுதிப்படுத்தலாம்.

"PhonePe chat, எங்கள் பயனர்கள் உரையாடலில் இருக்கும்போது அவர்களின் தொடர்புகளுக்கு பணம் அனுப்புவது மிகவும் எளிதாக்குகிறது. ஃபோன்பே செயலியில் ஒரு பயனரின் பரிவர்தனை வரலாறு (transaction history) chat flow-ல் காட்டப்படும். இது மிகவும் ஈர்க்கக்கூடிய அனுபவமாக அமைகிறது," இணை நிறுவனர் மற்றும் CTO Rahul Chari, PhonePe, ஒரு அறிக்கையில் கூறியது.

conversation history உடன் பயனர்கள் தங்கள் பரிவர்தனைகளைக் (transactions) கண்காணிக்கவும் இது உதவுகிறது.

"வரவிருக்கும் வாரங்களில், group chat போன்ற அம்சங்களுடன் ஃபோன்பே chat-ஐ மேம்படுத்துவோம். இது பயனர்கள், இந்த தளத்தில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து பணம் அனுப்புவது / பெறுவது எளிதாக்கும்" என்று சாரி (Chari) மேலும் கூறினார்.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுக்காக ஒரு வாரத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்சம், 185 மில்லியனுக்கும் அதிகமான ஃபோன்பே பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: PhonePe, PhonePe Chat
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17 Air: 5.5mm மெல்லிய டிசைன், ₹80,000-க்கு 5G! ஆப்பிளின் புது ஸ்லிம் ஹீரோ!
  2. Apple Watch Series 11, Ultra 3, SE 3: 5G RedCap, S11 சிப், சாட்டிலைட் SOS! #AweDropping இவென்டில் அறிமுகம்! #AppleWatch
  3. iPhone 17 Pro-ல 8X ஜூம், 5,000mAh பேட்டரி, வேப்பர் கூலிங்! 'Awe Dropping' இவென்டுக்கு முன் பெரிய லீக்ஸ்
  4. iPhone 17 Air, Watch Series 11, AirPods Pro 3! ஆப்பிளின் 'Awe Dropping' இவென்ட் இன்று 10:30 PM IST-ல லைவ்
  5. "இது வேற லெவல்!" - Apple-ன் 'Awe Dropping' நிகழ்வு! iPhone 17, Apple Watch Series 11, AirPods Pro 3-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
  6. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  7. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  8. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  9. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  10. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.