உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதைத் தொடந்து, 'பிராக்டோ' இணையதளம் மூலம் வைரஸ் பரிசோதனையை ஆன்லைனில் செய்துகொள்ளலாம்.
பிராக்டோ நிறுவனம், தைரோகேருடன் இணைந்து கண்டறிதல் சோதனைகளை நடத்தவுள்ளது. இந்த சோதனையை நடத்த, இந்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இரண்டும் அங்கீகாரம் அளித்துள்ளது. வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள, மருத்துவரின் பரிந்துரை, மருத்துவர் கையெழுத்திட்ட பரிசோதனை கோரிக்கை படிவம் மற்றும் பரிசோதனை நேரத்தில் புகைப்பட அடையாள அட்டை வழங்க வேண்டும்.
கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் பரிசோதனை மிக முக்கியமானது. நோய்த்தொற்றின் அறிகுறிகளை உறுதிசெய்ய, ஆய்வகங்கள் மற்றும் மையங்களின் பட்டியலை விரிவுபடுத்துவதில் அரசு மும்முரமாக உள்ளது. Practo, வைரஸ் பரவியுள்ள பல பகுதிகளை அடையாளம் கண்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றவுள்ளது. இது போன்ற கடினமான காலங்களில், அனைத்து இந்தியர்களுக்கும், தரமான சுகாதாரத்தை வழங்குவத்தே எங்களின் முக்கிய குறிக்கோள் என்று, பிராக்டோவின் தலைமை சுகாதார அதிகாரி, டாக்டர் அலெக்சாண்டர் குருவில்லா (Alexander Kuruvilla) கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்